சென்னை ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் கடற்கரைக்களுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தை (என்டிசிபிடபிள்யூசி) மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்துவைத்தார்.
சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.77 கோடி ரூபாய் செலவில் இந்த என்டிசிபிடபிள்யூசி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், அறிவியல் சார்ந்த ஆதரவு, உள்ளூர், மண்டலம், தேசியம் மற்றும் சர்வதேச அளவிலான கல்வி, ஆராய்ச்சி மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கான தீர்வுகளை அளிக்கும்.
இதுகுறித்து பிரதமர் தமது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிலில் கூறியிருப்பதாவது:-
“சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள என்டிசிபிடபிள்யூசி, இந்தியாவின் கடல்சார் துறையின் மேம்பாட்டிற்கு வலிமைசேர்க்கும்“
(Release ID: 1919337)
***
AD/ES/RR
The NTCPWC at @iitmadras will strengthen the growth of India’s maritime sector. https://t.co/Dz0CMYlPK7 https://t.co/h4N5d0cT25
— Narendra Modi (@narendramodi) April 25, 2023