Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சென்னை ஐஐடி-யின் 56 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றினார்.


சென்னையில் இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் 56 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார்.

 

இதில் கூடியிருந்தோர் இடையே உரையாற்றிய பிரதமர், “எனக்கு முன்னால் சிறிய இந்தியா, புதிய இந்தியாவின் உணர்வு என இரண்டும் உள்ளன.  திறனும், துடிப்பும் ஆக்கமும் இங்கே உள்ளன.  உங்களின் கண்களில் எதிர்காலக் கனவுகளை என்னால் காண முடிகிறது, உங்கள் கண்களில் இந்தியாவின் விதி என்னால் காண முடிகிறது” என்றார்.  பட்டம் பெறும் மாணவர்களின் பெற்றோர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டிய பிரதமர், ஊழியர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார். “உதவியாக இருக்கும் ஊழியர்களின் பங்களிப்பை வெளிப்படுத்த நான் விரும்புகிறேன், உங்களுக்கு உணவு தயாரிப்பதில், வகுப்பறைகளைத் தூய்மையாக பராமரிப்பதில், விடுதிகளைத்    தூய்மையாக வைப்பதில் இவர்கள் அமைதியாகப் பின்னணியில் இருக்கிறார்கள்”.

 

இந்திய இளைஞர்களின் திறன்களில் நம்பிக்கையிருப்பதாகப் பிரதமர் கூறினார்.  “அமெரிக்காவில் நான் மேற்கொண்ட பயணத்தின் போது, ஒரு பொதுவான இழை எங்கள் விவாதத்தில் காணப்பட்டது.  அது புதிய இந்தியா குறித்த நம்பிக்கையாக இருந்தது.  உலகம் முழுவதும் இந்திய சமூகம் தனக்கான முத்திரையைப் பதித்துள்ளது.  குறிப்பாக, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பில்.   இந்த சக்தியை யார் அளித்தது?   இதில் பெரும்பாலானவர்கள்  உங்கள் ஐஐடி-யின் சீனியர்கள்.  நீங்கள்  இந்தியக் குறியீட்டை உலக அளவில்  வலுவாக உருவாக்கியிருக்கிறீர்கள்”.

 

“5 லட்சம் டாலர் பொருளாதாரமாக வளரும் ஆர்வத்தை இன்று இந்தியா கொண்டிருக்கிறது.  உங்களின் புதிய கண்டுபிடிப்பும் தொழில்நுட்பத்தின் மீதான வேட்கையும் இந்தக் கனவுக்கு  ஊக்கமாக இருக்கும்.  மிகுந்த போட்டிப் பொருளாதாரமாவதற்கு இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடாக இது இருக்கும். இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள், பொருளாதாரத்தையும் பயன்பாட்டையும் கலந்த மகத்தானவை”. 

 

நமது நாட்டில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான சூழலை உருவாக்க  நாங்கள் பணியாற்றி வருகிறோம்.  பல நிறுவனங்களில்  அடல் புதிய கண்டுபிடிப்பு முயற்சி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  புதுமைத் தொழில்களுக்கு சந்தையைக் கண்டறிவது அடுத்த நடவடிக்கையாகும் என்று பிரதமர் கூறினார்.

 

“உங்களின் கடுமையான உழைப்பு சாத்தியமில்லாததை சாத்தியமாக்கியுள்ளது.  உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.  அவை அனைத்தும் எளிதானவை அல்ல.  கனவு காண்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள்.  நீங்களாகவே சவாலை எதிர்கொள்ளுங்கள்.  இதுதான் உங்களை நீங்களே சிறந்தவராக்கிக் கொள்ள வழியாகும்” என்று பிரதமர் அறிவுறுத்தினார். 

 

“நீங்கள் எங்கே பணியாற்றுகிறீர்கள், எங்கே வாழ்கிறீர்கள் என்பது பொருட்டல்ல; உங்கள் தாய்நாட்டின் தேவைகளை மனதில் கொள்ளுங்கள்.  உங்களின் பணி, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு எவ்வாறு உங்களின் தாய்நாட்டிற்கு உதவுகிறது என்று எண்ணிப் பாருங்கள்.  இதுவும் கூட உங்களின் சமூகப் பொறுப்புதான்” என்று பிரதமர் தெரிவித்தார்.

 

“ஒரு சமூகமாக, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிலிருந்து வெளியேற இன்று நாம் விரும்புகிறோம்.  சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாக அதே மாதிரி பயன்படுகின்ற ஆனால், அதேமாதிரி பாதகம் செய்யாததாக எது இருக்கும்? இதற்குத்தான் உங்களைப் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களை நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம்.  தகவல் அறிவியல், நோய் கண்டறிதல், நடத்தை அறிவியல், மருந்து ஆகியவற்றோடு தொழில்நுட்பம் இணையும் போது வியப்பூட்டும் விஷயங்கள் உருவாகும்” என்று பிரதமர் மேலும் கூறினார். 

 

“மக்களில் இரண்டு வகையினர் உள்ளனர்-வாழ்பவர்கள், இருப்பவர்கள்” சுவாமி விவேகானந்தரின் கருத்தை மேற்கோள்காட்டிய பிரதமர், மற்றவர்களுக்காக வாழ்கின்றவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.  வாழ்க்கையை நிறைவு செய்கிறார்கள் என்றார். 

 

கல்வியும், கற்றலும் தொடர்ச்சியான நடைமுறை என்பதோடு, பிரதமர் நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.   இந்த நிறுவனத்திலிருந்து வெளியேறிய பின்னரும் கற்றலைத் தொடர்ந்து, கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்று மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

PM @narendramodi addressing at @iitmadras convocation. pic.twitter.com/RVjGUisuOc

— PIB India (@PIB_India) September 30, 2019

*******