Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

செகந்திராபாத் – திருப்பதி இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் ஆன்மீக சுற்றுலாவுக்கு உதவுவதுடன் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்: பிரதமர்


வந்தே பாரத் அதிவிரைவு ரயில், இணைப்பை மேம்படுத்தி, வசதியான பயணத்திற்கு வழிவகுக்கும் பெருமைமிக்கது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

செகந்திராபாத்-  திருப்பதி இடையே வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர்  கொடியசைத்து துவக்கி வைப்பது குறித்து மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டியின் ட்வீட்டை  பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“வந்தே பாரத் அதிவிரைவு ரயில்  பெருமைமிக்க , வசதியான பயணத்தையும், இணைப்பையும் அளிப்பதாகும். செகந்திராபாத் – திருப்பதி இடையேயான இந்த ரயில் சுற்றுலாவுக்கு , குறிப்பாக ஆன்மீக சுற்றுலாவுக்கு பயனளிக்கும். இது பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும்”.

—–

VJ/PKV/KPG