கோவாவின் சூரியசக்தி மேற்கூரை தளமானது சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதற்கும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஒரு நல்ல முன்னெடுப்பு என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார். சோலார் சூரியசக்தி ஆன்லைன் தளம் goasolar.in ஆனது கோவா எரிசக்தி மேம்பாட்டு முகமையால் (GEDA) புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சாரத் துறையுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்தின் ட்விட்டர் பதிவுகளுக்குப் பதிலளித்த பிரதமர், “சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஒரு நல்ல முன்னெடுப்பு” எனப் பதிவிட்டுள்ளார்.
**********
AD/CR/DL
Good step towards harnessing solar energy and furthering sustainable development. https://t.co/opsUJyebzI
— Narendra Modi (@narendramodi) April 2, 2023