Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சூரத் நகரில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, வைர உற்பத்திப் பிரிவு ஆகியவற்றைப் பிரதமர் திறந்து வைத்தார்

சூரத் நகரில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, வைர உற்பத்திப் பிரிவு ஆகியவற்றைப் பிரதமர் திறந்து வைத்தார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி கிரண் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையையும் திருவாளர்கள் ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வைர உற்பத்திப் பிரிவையும் சூரத் நகரில் இன்று (திங்கள்கிழமை ஏப்ரல் 17, 2017) தொடங்கிவைத்தார்

மருத்துவமனையைப் பாராட்டத் தக்க வகையில் மேம்படுத்துவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட பெரிய முயற்சிகளை வருணித்த பிரதமர் அந்த சிறந்த மருத்துவமனை குடிமக்களுக்குப் பெரிதும் பயன்படும் என்று குறிப்பிட்டார். ஏழைகள் தரமான மிகக் குறைந்த செலவில் உடல் ஆரோக்கியத்தைப் பெறவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மருந்துகள், இதர பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சியகளைப் பிரதமர் கூறினார். ஏழைகளும் நடுத்தர வகுப்பினரும் எளிதில், செலவு குறைந்த மருத்துவ நலத்தை அடைவதற்கு உரியவற்றைச் செய்வதில் தான் உறுதி பூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வருமுன் காப்பதன் அவசியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் தூய்மை இந்தியா இயக்கம் ஆரோக்கியமான இந்தியாவுடன் தொடர்புடையது என்று சுட்டிக் காட்டினார்.

வைரத் தொழிலில் சூரத் நகரம் குறிப்பிட்டத் தக்க சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் கூறினார். “வைரம், நகைகள் ஆகியவற்றின் உற்பத்தியைப் பொருத்தவரையில் நமது குறிக்கோள் இந்தியாவில் தயாரிப்போம் என்பதுடன் மட்டுமின்றி, இந்தியாவில் வடிவமைப்போம் என்பதாகவும் அமைந்திருக்க வேண்டும்” என்றார்.

***