Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுஸ்லான் எனர்ஜியின் நிறுவனர் திரு துளசி தாந்தியின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


முதுபெரும் வர்த்தக நிபுணரும், சுஸ்லான் எனர்ஜியின் நிறுவனருமான திரு துளசி தாந்தியின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 

அவர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

 

‘நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அளப்பரிய பங்ளித்து, நிலையான வளர்ச்சியை நோக்கிய நம் நாட்டின் முயற்சிகளுக்கு வலு சேர்த்த முன்னோடி வர்த்தக தலைவராகத் திகழ்ந்தவர், திரு துளசி தாந்தி. அவரது அகால மறைவினால் துயரடைந்தேன். அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.”

***********