Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுவாமி திரு நாராயண குரு பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.


சமூக சீர்திருத்தவாதியான திரு. நாராயண குரு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்

“பெரும் மதிப்பிற்குரிய சுவாமி திரு. நாராயண குரு அவர்களின் பிறந்த தினத்தன்று நான் அவருக்கு தலை வணங்குகிறேன். அவரின் உயரிய எண்ணங்கள், போதனைகள் மற்றும் அநீதியை எதிர்த்து அவர் போராடிய விதங்கள் எல்லாம் என்றும் நமக்கு ஊன்றுகோலாய் இருக்கும்”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

திரு. நாராயண குரு அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த சமூக சீர்த்திருத்தவாதி ஆவார். இவர் சாதியத்திற்கு எதிராக நடந்த சீர்திருத்த இயக்கத்திற்கு தலைமையேற்று வழிநடத்தியவர். ஆன்மிக சுதந்திரம் மற்றும் சமூக சமத்துவம் குறித்த புதிய உயரிய எண்ணங்களை ஊக்குவித்தவர்.