Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா – ஃபின்லாந்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ஃபின்லாந்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு  ஒப்புதல் வழங்கியுள்ளது.

பயன்கள்:

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதன்மை நோக்கங்கள் வருமாறு :

  • சுற்றுலாத்துறையில்  இருதரப்பு ஒத்துழைப்பை வெற்றிகரமாக மேம்படுத்துவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் கூட்டான நட்புறவுக்கு அடித்தளம் அமைத்தல்
  • சுற்றுலா தொடர்பான தகவல், அறிவு, நிபுணத்துவம் உள்ளிட்டவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல்
  • கொள்கைகள் உருவாக்கம், முறைப்படுத்துதல்,  திட்டமிடலின் தரம், அமலாக்கம், சுற்றுலாக் கொள்கை மேம்பாடு ஆகியவற்றின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
  • கூட்டான திட்டங்களை அடையாளம் காணுதல், விரிவுபடுத்தலுக்கான வசதி, பயணங்கள், சந்திப்புகள், பயிலரங்குகள் போன்றவை மூலம் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கிடையே, உறவை உருவாக்குதல்
  • ஒத்துழைப்புப் பிரிவில், இந்தியா – ஃபின்லாந்து நிபுணர்களுக்கான பயிலரங்குகள், ஆய்வுப் பயணங்கள் மூலம் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளுதல்

பின்னணி :

இந்தியாவும், ஃபின்லாந்தும் வலுவான தூதரக உறவையும் நீண்டகால பொருளாதார உறவையும் கொண்டுள்ளன. இந்த உறவை மேலும் வலுப்படுத்தி மேம்படுத்த இருதரப்பினரும் விரும்புவதையடுத்து சுற்றுலாத்துறை ஒத்துழைப்புக்காக இந்தியக் குடியரசின் சுற்றுலாத்துறை- ஃபின்லாந்து அரசின் பொருளாதார விவகாரங்கள்,  வேலைவாய்ப்பு அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.