Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுசூகி மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒசாமு சுசூகியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

சுசூகி மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒசாமு சுசூகியுடன் பிரதமர் மோடி சந்திப்பு


ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் டோக்கியோவில், சுசூகி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒசாமு சுசூகியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, இந்திய வாகனத்துறையில் சுசூகி மோட்டார்ஸ் நிறுவனம் செய்து வரும் பங்களிப்புக்காக பாராட்டு தெரிவித்தார். நிலையான வளர்ச்சியை இலக்கை அடைவதற்கு மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகளுக்கான உற்பத்தி வசதிகள் மற்றும் மறுசுழற்சி மையங்களை அமைப்பது இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அப்போது இருவரும் விவாதித்தனர். மேலும், திறன் மேம்பாடு படிப்புகள் மூலம் இந்தியாவில் உள்ளுர் கண்டுபிடிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது.

***************