பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா-மொராக்கோ இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை, கீழ்க்காணும் பகுதிகளில் ஒத்துழைப்புக்கு வழிவகை செய்கிறது:-
1. குழந்தைகளுக்கு ஏற்படும் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட மற்றவர்களுக்கு பரவாத நோய்கள்;
2. மருந்து ஒழுங்குமுறை மற்றும் மருந்துகளின் தரக் கட்டுப்பாடு;
3. மற்றவர்களுக்கு பரவும் நோய்கள்;
4. மகப்பேறு, குழந்தை மற்றும் சிசு பாதுகாப்பு;
5. சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்வதற்காக இரண்டு மருத்துவமனைகள் ஒருங்கிணைந்து செயல்படுதல்;
6. சுகாதார சேவைகள் மற்றும் மருத்துவமனைகளில் நிர்வாகம் மற்றும் மேலாண்மைக்கு பயிற்சி அளித்தல்;
7. ஒத்துழைப்பு தேவை என பரஸ்பரம் முடிவுசெய்யப்படும் மற்ற ஏதாவது பகுதிகள்.
ஒத்துழைப்பின் விவரங்களை மேலும் விரிவாக எடுத்துரைக்கவும், இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை அமல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடவும் ஒரு பணிக்குழு அமைக்கப்படும்.
****