Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுகாதாரத் துறையில் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


சுகாதாரத் துறையில் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஜூன் 8, 2019 அன்று கையெழுத்திடப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கீழ்கண்ட துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும்: –

  1. மருத்துவர்கள், மருத்துவத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் நிபுணர்களின் பரிமாற்றம் மற்றும் பயிற்சி
  2. மருத்துவம் மற்றும் சுகாதாரம் குறித்த ஆய்வுகளை மேம்படுத்துதல்
  3. மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் குறித்த கட்டுப்பாடு மற்றும் அது குறித்த தகவல்கள் பரிமாற்றம்.
  4. தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்கள்
  5. இணைய சுகாதாரம் மற்றும் தொலை மருத்துவம்
  6. இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ள மற்ற பிரிவுகளுக்கான ஒத்துழைப்புகள்

 இந்த ஒப்பந்தம் குறித்த  விவரங்களை விரிவாக்கவும் அதன் செயல்பாட்டை கண்காணிக்கவும் பணிக்குழு அமைக்கப்படும்

********

கீதா/ஸ்ரீ