Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுஃபி மதத் தலைவர்கள் குழு பிரதமருடன் சந்திப்பு

சுஃபி மதத் தலைவர்கள் குழு பிரதமருடன் சந்திப்பு

சுஃபி மதத் தலைவர்கள் குழு பிரதமருடன் சந்திப்பு

சுஃபி மதத் தலைவர்கள் குழு பிரதமருடன் சந்திப்பு

சுஃபி மதத் தலைவர்கள் குழு பிரதமருடன் சந்திப்பு

சுஃபி மதத் தலைவர்கள் குழு பிரதமருடன் சந்திப்பு

சுஃபி மதத் தலைவர்கள் குழு பிரதமருடன் சந்திப்பு


சுஃபி மதத் தலைவர்கள் முன்னெடுத்து வைத்த கொள்கைகள் இந்திய பண்பாட்டிற்கு ஒன்றிணைந்த வகையில் உள்ளது என்றும் பலதரப்பட்ட சமுதாய மக்களை கொண்ட இந்தியாவிற்கு இக்கொள்கைகள் சிறந்த அளவில் பங்களித்துள்ளன என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த பரல்வி பிரிவைச் சேர்ந்த சுஃபி அறிஞர்களின் குழுவினர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தனர். தற்போது நிலைவிவரும் தீவிரவாதம் சுஃபி கொள்கைகளை வெகுவாக பாதிக்கிறது என்று அப்போது தெரிவித்தார். தீவிரவாதக் கொள்கைகளை சுஃபி மதத் தலைவர்களும் அறிஞர்களும் எதிர்த்து நிற்கவேண்டியது அவசியம் என்று பிரதமர் கூறினார். இதற்காக பல்வேறு வழிமுறைகளையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறிய அவர், இந்தியாவில் வன்முறை தலையெடுக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார். சுஃபி மதக் கொள்கைகள் தொடர்ந்து நன்கு வேரூன்றி நின்றால் தீயவைகள் களையப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய அரசு திறன் மேம்பாட்டு திட்டத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் இவற்றை இஸ்லாமிய சமுதாயம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். வக்பு சொத்துக்கள் பற்றிய பிரச்சினைகள் குறித்து தன்னை சந்தித்த இந்தக் குழுவிடம் பிரதமர் கூறியபோது இப்பிரச்சினைகள் குறித்து கவனிக்கப்படும் என்று உறுதியளித்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் சுஃபி கலாச்சாரம் மற்றும் இசை ஆகியவை மேம்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி இக்குழுவிடம் உரையாடிய போது இஸ்லாம் தீவிரவாதத்தையோ அல்லது வெறுப்புணர்வையோ போதித்தது இல்லை என்றார். பிரதமருடன் இஸ்லாமிய சமுதாயம் இணக்கமான முறையில் நெருங்கி உறவாட தீய சக்திகள் விரும்பவில்லை என்று கூறுவதைப் பற்றி கவலைத் தெரிவித்த இஸ்லாமிய பிரமுகர்கள் ஓட்டு வங்கிக்காகவும் அரசியலில் பிளவு ஏற்படுத்தவும் இவை பயன்படுத்தப்படுகின்றன என்று கூறினர். இப்போது பிரதமர் நேரடியாகவே முஸ்லீம் மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மத இன சமூக வேறுபாடின்றி வளர்ச்சிப் பணிகளுக்காக பிரதமர் பணியாற்ற வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இஸ்லாம் மதத்தின் பெயரில் தீவிரவாதம் பரப்பப்படுகிறது என்று கூறிய குழு உறுப்பினர்கள் இதனால் உலகம் முழுவதும் அமைதிக்கு ஆபத்து உண்டாகிறது என்றும் கூறினர். ஜிகாத் என்ற பெயரில் சமூக பொருளாதா அரசியல் அடிப்படையில் இது போன்ற தீய சக்திகள் ஒடுக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் கூறினர். அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகிய தீவிரவாத அமைப்புகள் இஸ்லாம் மத கோட்பாட்டின் வழியில் வந்தவை அல்ல என்று இஸ்லாமிய சமுதாயம் இந்த அமைப்புகளை ஒதுக்க வேண்டும் என்றும் இதற்கான விழிப்புணர்ச்சி தேவை என்று அவர்கள் கூறினர்.

இந்தியாவில் சுஃபி கொள்கைகளும் கலாச்சாரமும் மேம்படுவதற்காக பல ஆலோசனைகளை குழு உறுப்பினர்கள் வழங்கினர். சுஃபி மத வழிபாட்டு நிலையங்களுக்கு செல்வதற்கு தேவையான சுற்றுலா திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று பிரதமரை அப்போது அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் பின்வருமாறு

• ஹஸ்ரத் சையது முகம்மது அஷ்ரப் கிச்சோவ்ச்வி, தலைவர் மற்றும் நிறுவனர், அகில இந்திய உலமா, மாஷைக் வாரியம் (AIUMB)

• ஹஸ்ரத் சையது ஜலாலுதீன் அஷ்ரப், தலைவர், மக்தூம் அஷ்ரப் இயக்கம், கொல்கத்தா

• ஹஸ்ரத் சையது அகமது நிஜாமி, சஜதா நாஷின், தர்கா ஹஸ்ரத் நிஜாமுதீன் ஆலியா, புதுதில்லி

• ஷேக் அபுபெக்கர் அகமது முஸ்லியர், பொதுச்செயலாளர், அகில இந்திய முஸ்லிம் அறிஞர்கள் சங்கம்.

• ஹஸ்ரத் சையது மெஹந்தி சிஷ்டி, தர்கா-இ-க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி, அஜ்மீர் ஷரீப், உறுப்பினர்

• ஜனாப் நேசர் அகமது, கல்வியாளர்

•••••••