சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் மற்றும் சட்டத்துறை கமிஷனின் செயலாளர் திரு.மெங்க் ஜியான்சு இந்திய பிரதமர் மோடியை இன்று சந்தித்தார்.
கடந்த இரண்டாண்டுகளில் இந்தியா மற்றும் சீனா இடையே பரஸ்பரம் உயர்மட்ட அளவில் நடந்துள்ள பயணங்களை வரவேற்ற பிரதமர் மோடி, இப்படியான பயணங்கள் இருநாடுகளுக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் என தெரிவித்தார்.
மே 2015ல் சீனாவுக்கு மேற்கொண்ட தன்னுடைய வெற்றிகரமான இருதரப்பு பயணத்தை ஆர்வத்துடன் நினைவுகூர்ந்த பிரதமர், செப்டம்பர் 2016ல் ஹேங்க்சோ நகருக்கு G-20 மாநாட்டின் பொருட்டு செய்த பயணத்தையும் நினைவுகூர்ந்தார்.
இருதலைவர்களும் பயங்கரவாதத்திற்கு எதிரான இருதரப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதித்தனர். சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இந்தியா-சீனா நாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படுவது மேம்பட்டிருப்பதை வரவேற்றார்.
Mr. Meng Jianzhu, Secretary of the Central Political and Legal Affairs Commission of the Communist Party of China met PM @narendramodi. pic.twitter.com/xLAVwJYLPZ
— PMO India (@PMOIndia) November 9, 2016