Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் தொலைபேசியில் வாழ்த்து


சீன மக்கள் குடியரசின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேதகு திரு. ஜீ ஜின்பிங்கை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

விரைவான வளர்ச்சி கண்டு வரும் இரு பெரும் சக்திகளான இந்தியா மற்றும் சீனா இடையேயான இருதரப்பு உறவு 21ம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாக ஆக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

பரஸ்பர ஆர்வம் கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் தங்களது நெருக்கமான ஆலோசனைகளை தொடரவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.