பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், சீனாவின் தேசிய தினத்தில் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
“சீன மக்களுக்கு அவர்களின் தேசிய தினத்தில் எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார் பிரதமர்.
அன்பார்ந்த சீன தேசத்தின் சகோதர சகோதரிகளே. உங்கள் அனைவருக்கும் தேசிய தின வாழ்த்துக்கள். நம் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. நம் இரு நாடுகளும் இணைந்து, இவ்வுலகை ஒரு அற்புதமான இடமாக மாற்ற முடியும்.
இந்த நூற்றாண்டை ஆசிய நூற்றாண்டாக மாற்ற இந்தியா மற்றும் சீன நாடுகளின் உளவு வகை செய்யும். செப்டம்பர் 2014ல் இந்தியாவுக்கு சீன அதிபர் ஜீயின் வருகையும், மே 2015ல் சீனாவுக்கு எனது வருகையும், நம் இரு நாட்டு உறவுகள் மேம்படைய பெரும் வகையில் உதவி புரிந்துள்ளன. குடியரசுத் தலைவர் ஜி அவர்களுடனும், அதிபர் லீ அவர்களுடனும் நடந்த எனது பேச்சுவார்த்தைகளை நினைவு கூர்கிறேன்.
முதல் உலக யோகா தினத்தன்று, ஆர்வத்தோடு நீங்கள் யோகா பயின்றதற்கு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
வரும் காலத்தில் நமது இருநாட்டு உறவுகள் மேலும் பலப்படும் என்று நம்புகிறேன். மனித இனத்தின் வளர்ச்சிக்காக நமது இரு நாடுகளும் மேலும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
在中国国庆日,我向中国人民表示祝贺 pic.twitter.com/7S1i4sWeRD
— Narendra Modi (@narendramodi) October 1, 2015
My greetings to the people of China on their National Day. pic.twitter.com/JP4TX1SDvw
— Narendra Modi (@narendramodi) October 1, 2015