Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜென்ரல் வீ ஃபெங்கே, பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் சந்திப்பு


சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜென்ரல் வீ ஃபெங்கே, புதுதில்லியில் இன்று (21.08.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தியா – சீனா இடையேயான உயர்மட்டத் தொடர்புகள் அதிகரித்து வருவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, சீன அமைச்சரிடம் பாராட்டுத் தெரிவித்தார்.

இந்தியா – சீனா இடையிலான நட்புறவு உலகின் நிலைப்புத் தன்மைக்கு முக்கியக் காரணமாக திகழ்வதாக குறிப்பிட்ட பிரதமர், இரு நாட்டு எல்லைப் பகுதியில் அமைதி மற்றும் சமாதானத்தை நிலவச் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இதன்மூலமே, இந்தியாவும், சீனாவும் தங்களிடையேயான கருத்து வேறுபாடுகளை, அவை பிரச்சினையாக மாறாமல் தடுப்பதற்கான அனுபவ முதிர்ச்சியும், பக்குவமும் பெற்றிருப்பதை உணர்த்த முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அண்மையில், சீனாவின் ஊஹான், கிங்டாவோ மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் சீன அதிபர் திரு. ஸீ ஜின்பிங்-குடன் தாம் நடத்திய சந்திப்புகளையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி சீன அமைச்சரிடம் நினைவுகூர்ந்தார்.

———–