Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சீனப் பயணம் குறித்துப் பிரதமர் வெளியிட்ட அறிக்கை


பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி சீனாவில் உள்ள உஹான் நகருக்கு 2018, ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். அரசுமுறைப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:
“நான் சீனாவின் உஹான் நகரில் ஏப்ரல் 27, 28 ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்கிறேன். அங்கு சீன அதிபர் மேதகு திரு. ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசுகிறேன்.

அதிபர் ஷியும் நானும் இரு தரப்பு விவகாரங்கள், உலக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை விவாதிப்போம். பரஸ்பரம் நாங்கள் மேற்கொண்டுள்ள தொலைநோக்குகள், மேம்பாட்டுக்குத் தேவையானமுன்னுரிமைகள் ஆகியவை குறித்து இருவரும் விவாதிப்போம். அத்துடன், உலக அளவில் நடப்புகாலத்திலும், எதிர்காலத்திலும் ஏற்படும் சூழ்நிலை விஷயத்தில் இரு தரப்பினரும் மேற்கொண்டுள்ள பார்வைகள், முக்கியத்துவங்கள் குறித்தும் விவாதிப்போம்.

அத்துடன், இந்திய – சீன நல்லுறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இரு தலைவர்களும் நீண்டகாலக் கண்ணோட்டத்திலும் உத்திபூர்வமாகவும் விவாதிக்க இருக்கிறோம்” என்று பிரதமர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

***