Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சீக்கிய பிரதிநிதிகள் குழுவை பிரதமர் புதுதில்லியில் தமது இல்லத்தில் சந்தித்தார்

சீக்கிய பிரதிநிதிகள் குழுவை பிரதமர் புதுதில்லியில் தமது இல்லத்தில் சந்தித்தார்


புதுதில்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான 7, லோக் கல்யாண் மார்கில், சீக்கிய பிரதிநிதிகள் குழுவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களை  உள்ளடக்கியதாக இந்தக் குழு இருந்தது. மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரியும்  உடனிருந்தார்.

இந்த சந்திப்பின்போது  பேசிய பிரதமர், “சீக்கிய சமூகத்துடன் தமது நீண்ட கால தொடர்பை நினைவு கூர்ந்தார். “குருத்வாராக்களுக்கு செல்வது, வழிபாட்டில் நேரத்தை செலவிடுவது, உணவைப்  பெறுவது, சீக்கிய குடும்பங்களின் வீடுகளில் தங்குவது ஆகியவை எனது வாழ்க்கையின் பகுதியாகும். இங்குள்ள பிரதமரின் இல்லத்தில் அவ்வப்போது  சீக்கிய  துறவிகளின்  காலடிகள் படுகின்றன. அவர்களுடன்  இணைந்திருக்கும் நல்வா்ய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்” என்று பிரதமர் கூறினார். தமது வெளிநாட்டு பயணங்களின் போது உலகம் முழுவதும் உள்ள சீக்கிய பாரம்பரிய இடங்களுக்கு தாம் சென்றிருந்ததையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

“நமது குருக்கள் தைரியத்தையும், சேவையையும் நமக்கு கற்றுத்தந்துள்ளனர். இந்திய மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எந்த நிதி ஆதாரங்களும் இல்லாமல் செல்கிறார்கள். தங்களின் உழைப்பால் வெற்றி பெறுகிறார்கள்.  இதுதான் இன்றைய புதிய இந்தியாவின் உணர்வுமாகும்” என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

குருக்களின் மகத்தான பங்களிப்புக்கும் தியாகங்களுக்கும் தலை வணங்கிய பிரதமர்,  குருநானக் தேவ் அவர்கள், ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியை  எவ்வாறு தட்டி எழுப்பினார் என்பதை நினைவு கூர்ந்தார். இதன் மூலம் தேசத்தை இருளிலிருந்து வெளியே  கொண்டு வந்து வெளிச்சத்தின் பாதைக்கு அழைத்துச் சென்றார் என்றும் அவர் கூறினார்.  குருக்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளனர். அங்கெல்லாம் அவர்களின் அடையாளங்களும், ஊக்கங்களும் உள்ளன என்று அவர் கூறினார். குருக்களின் பாதங்கள் இந்த மகத்தான பூமியை புனிதப்படுத்தியுள்ன. அதன் மக்களை ஈர்த்துள்ளன.  ஒரே இந்தியா, உன்னத இந்தியா என்பதற்கு வாழும் பாரம்பரியமாக சீக்கிய பாரம்பரியம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  விடுதலைப் போராட்டக் காலத்திலும், அதற்கு பின்னரும் சீக்கிய சமூகத்தினரின் பங்களிப்புக்கு நாடு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.  துணிவு, ஆற்றல், கடின உழைப்பு, ஆகியவற்றின் மறுபெயர்களாக சீக்கிய சமூகம், இருக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

கடமை குறித்த குருக்களின் வலியுறுத்தலை சுட்டிக்காட்டிய பிரதமர், இதே வலியுறுத்தல் உணர்வை  அமிர்த காலத்துடன் இணைத்தார். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற  மந்திரத்தை  இந்த உணர்வு வெளிப்படுத்துகிறது என்று அவர் கூறினார். கடமை உணர்வு என்பது தற்காலத்திற்கு மட்டுமல்ல, எதிர்காலை தலைமுறைகளுக்கும் முக்கியமானது என்று பிரதமர் தெரிவித்தார். சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து, கலாச்சார மாண்புகள், பாதுகாப்பு, ஆகியவற்றுக்காக எப்போதும் சீக்கிய சமூகம் தீவிரமாக செயல்படுவதற்கு அவர் பாரட்டு தெரிவித்தார். அண்மையில் தொடங்கப்பட்ட அமிர்த நீர்நிலைகள் இயக்கத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற  வேண்டுகோளுடன் பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

——-