Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சி.ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளில் பிரதமர் அவருக்கு நினைவஞ்சலி


திரு சி. ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளில், அவரை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது  பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை, இலக்கியம், சமூகத்துக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது :
சி. ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது முயற்சிகள் ஆகியவற்றுக்காக அவர் என்றென்றும்  நினைவு கூரப்படுவார். அவரது பன்முகத் தன்மையுடன் கூடிய ஆளுமை, நிர்வாகம், இலக்கியம், சமூகத்துக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தினார். ஒவ்வொரு இந்தியருக்கும் கண்ணியமான வளமான வாழ்க்கைக்கு  ராஜாஜியின் கொள்கைகள் நமக்கு உத்வேகம் அளிக்கும்.

—-
 

TS/SV/KPG/DL