சிஸ்கோ நிறுவனத்தின் தலைவர் திரு. ஜான் சேம்பர்ஸ் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சிஸ்கோவின் கன்ட்ரி டிஜிட்டைசேஷன் ஆக்சலரேஷன் திட்டத்தின் அம்சங்களையும் அது எப்படி பிரதமரின் கனவான டிஜிட்டல் இந்தியா, திறன்மிகு இந்தியா, தொடங்கிடு இந்தியா, அதிநவீன நகரங்கள், இணையவெளி பாதுகாப்பு திட்டங்களுக்கு ஏற்ப உள்ளது என்பதையும் திரு. ஜான் சேம்பர்ஸ் பிரதமரிடம் விவரித்தார்.
சிஸ்கோவின் இந்த நடவடிக்கைகளை பாராட்டிய பிரதமர், தொலைதூர கல்விக்கு அதனால் ஏற்படும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மானியம் வழங்குவதில் ஏற்படும் கோளாருகளை சரிசெய்ய கணிணி தொழில்நுட்பம் உபயோகமாக உள்ளது என்று பிரதமர் கூறினார். இணையவெளி பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பிரதமர் பேசினார்.
***
John Chambers of CISCO & I spoke about some of CISCO's initiatives & aspects relating to technology & Digital India. https://t.co/EdBqwqVcuY
— Narendra Modi (@narendramodi) 18 March 2016