Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மேம்பாட்டு ஆணையர் அலுவலகத்தில் இந்திய நிறுவனங்கள் மேம்பாட்டு சேவை என்ற புதிய பணிச் சேவையை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் மேம்பாட்டு ஆணையர் அலுவலகத்தில் புதிய பிரிவை உருவாக்கவும், இந்திய நிறுவனங்கள் மேம்பாட்டு சேவை என்ற பெயரில் புதிய சேவையை தொடங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய பிரிவை உருவாக்குவது மற்றும் கட்டமைப்பை மாற்றுவதன் மூலம், இந்த அமைப்பை வலுப்படுத்துவதுடன், இந்தியாவில் தொடங்குவோம், இந்தியாவை நிலைநிறுத்துவோம், இந்தியாவில் தயாரிப்போம் என்ற இலக்குகளை அடைய முடியும்.

இந்த நடவடிக்கை, இந்த அமைப்பின் திறனையும், தகுதியையும் வலுப்படுத்தும். மேலும், தொழில்நுட்ப அதிகாரிகளைக் கொண்ட தனிப்பட்ட பிரிவு மூலமும், தனிக் கவனத்துடன் கூடிய முயற்சிகளாலும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் வளர்ச்சி இலக்கை எட்ட முடியும்.