Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் மகிழ்ச்சி


இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டதுடன், விலங்குகளின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரையில், “மிகச் சிறப்பான செய்தி!

சிங்கங்கள் மற்றும் புலிகளைத் தொடர்ந்து சிறுத்தைகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

விலங்குகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த நடவடிக்கைகளை நாம் தொடர்வதுடன், பாதுகாப்பான இடங்களில் விலங்குகள் வாழ்வதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்”, என்று தெரிவித்துள்ளார்.