Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு


சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள மத்திய ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை இந்திய நாடாளுமன்ற குழு ஏற்பாடு செய்திருந்தது. குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் இந்த விருதுகளை வழங்கினார். குடியரசுத் துணை தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு மற்றும் மக்களவைத் தலைவர் திருமதி. சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விருது பெற்றவர்களை பாராட்டிய பிரதமர் நாடாளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் அவர்கள் ஆற்றிய தொண்டு அனைவரின் நினைவிலும் என்றும் நிலைத்திருக்கும் இன்று கூறினார். இந்த சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பணியாற்றுவதும், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வது தமக்கு பெருமையாக உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் 125 கோடி இந்திய மக்களின் கனவுகள் மற்றும் கருத்துகளை பிரதிபலிக்கிறது. நாடாளுமன்றத்தில் கூறப்படும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பெருமதிப்பு உண்டு. முக்கிய பிரச்சினைகளை தீர்க்க அரசுக்கும் கொள்கையாளர்களுக்கும் அவை வாய்ப்பை அளிக்கிறது என்று கூறினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் பெறப்படும் அமளிகள் பொதுமக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதிப்பை அழிக்கறது. இவ்வாறு ஏற்படும் அமளிகள் அரசை காட்டிலும் நாட்டுக்குதான் இழைப்பை ஏற்படுத்துகிறது.

நாடாளுமன்ற சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை இன்று சுட்டிக்காட்டிய பிரதமர் அப்போதுதான் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு கிடைத்து அவர்களும் நமது வரலாற்றில் இடம் பெற உதவும் என்று கூறினார்.

***