Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சியோல் நகரில் ஆசிய நாடுகளின் தலைவர்கள் குழுவில் பிரதமர் கூறிய கருத்துக்கள்


குடியரசுத் தலைவர் பார்க் குவன் ஹை அவர்களே,
மேதகு ஷேகா மோசா அவர்களே,
மேதகு பான் கி மூன் அவர்களே,

சாசுன் இல்போவின் குடியரசுத்தலைவர் திரு. பாங் சாங் ஹூம் அவர்களே,,

குடியரசுத் தலைவர் பாக் மற்றும் ஷேகா மோசா, பான் கி மூன் ஆகியோருடன் நான் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமையடைகிறேன்.

ஆசியா கண்டத்தில் இவர்கள் பெரும் தலைவர்களாக விளங்குகின்றனர். இவர்கள் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் ஆனாலும், ஒரே உணர்வுடன் இருக்கின்றனர்.

கொரிய குடியரசு நாட்டிற்கு எனது அரசின் முதல் ஆண்டிலேயே நான் வருகை புரிந்தது குறித்து பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

கொரிய நாட்டின் பல பொருள்கள் இந்திய இல்லங்களுக்கு வருவதற்கு முன்பாகவே இந்திய மக்களின் இதயத்தில் அவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் சிறந்த கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் கொரியாவை கிழக்கு நாடுகளின் விளக்கு என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது கொரியா இதை நிரூபித்துள்ளது.

கொரியா நாட்டின் பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில் நுட்பத் துறையில் உலக நாடுகளிடையே தலைமை இடத்தை வகிப்பது ஆகியவற்றால் ஆசிய நாடுகளுக்கு இது சிறந்த முன் உதாரணமாக விளங்குகிறது.

ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் குடியரசு மற்றும் நிலையான தன்மை ஆகியவற்றை கொரியா அளிக்கிறது.

இன்றைய காலகட்டத்தில், ஆசியா மீண்டும் புத்துணர்வு பெற்றுள்ளது என்பது பெரிய நிகழ்ச்சியாகும்.

ஜப்பான் நாட்டில் துவங்கிய இது, சீனா, கொரியா தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் இது பரவியுள்ளது.

மேற்குப் பகுதியில் கத்தார் போன்ற நாடுகளில் பாலைவனமாக இருந்த பகுதிகளில் தற்போது பொருளாதார மேம்பாடுகள் அடைந்துள்ளன.

ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள இதுபோன்ற சாதனைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என தற்போது இந்தியாவின் பங்கு மிகவும் முக்கியமாக உள்ளது.

இந்தியா 125 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ளது. சுமார் 800 மில்லியன் இளைஞர்கள் நாட்டில் உள்ளனர்.

இந்தியாவின் திறமையில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. கடந்த ஆண்டு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை உண்மையாக்கினோம்.

இந்தியாவின் வளர்ச்சி ஆண்டுக்கு 7.5 சதவீதமாக உயர்ந்தது. இது மேலும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது.

உலகம் மற்றும் நமது மண்டலத்தில் இந்தியா ஒரு சிறந்த இடமாக உள்ளது என்று உலக நாடுகள் தற்போது ஒரே குரலில் கூறுகின்றன.

உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள் முன்னேற்றமடைய இது வாய்ப்பளிக்கிறது.

இந்தியா நமது உலகிற்கு அளிக்க வேண்டிய செயல் திட்டங்களை திறமையுடன் இதன் மூலம் அளிக்க முடியும்.

இந்தியாவின் முன்னேற்றம் ஆசிய நாடுகளின் வெற்றிக்கு வித்திடுகிறது. ஆசிய நாடுகள் காணும் கனவுகள் மெய்ப்பட இது உதவும்.

ஏனெனில், ஆசிய நாடுகள் அனைத்தும் முன்னேற்றமடைந்தால் ஆசிய கண்டமும் முன்னேறும்.

ஆசியா கண்டத்தில் வளமான நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் என்று இரண்டு வகையான நாடுகள் இருக்கக்கூடாது.

ஆசியா கண்டத்தின் சில நாடுகளில் பொருளாதார வளர்ச்சியும், மற்ற நாடுகளில் வீழ்ச்சியும் இருக்கக்கூடாது. சில மண்டலங்கள் நிலையானதாகவும், மற்றவை நிலையற்ற தன்மை உடையதாகவும் இருக்கக்கூடாது.

ஆசிய நாடுகளில் உள்ள வளங்கள் அனைத்தும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. ஒரு நாட்டின் சாதனைகள் மற்ற நாடுகளுக்கு வலுவுள்ளதாக அமைய வேண்டும்.

நாடுகளிடையே ஏற்படும் வளர்ச்சி ஒருங்கிணைந்த வகையில் அமைய வேண்டும். தேசிய அளவிலான அரசுகள் மட்டுமின்றி, மண்டல அளவிலும் நாடுகளுக்கு பொறுப்பு உண்டு.

ஆகவேதான், இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி நாம் கனவு காணும்போது அதுவே நமது அண்டை நாடுகளுக்கும் பொருந்தும் என்று நான் விரும்புகிறேன்.

ஆசியா கண்டத்தில் சில நாடுகள் வளமுள்ளவைகளாக இருக்கின்றன. அதுவும் நமது வளங்கள் மற்றும் சந்தையை பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

இதை ஆசியாவின் பல நாடுகள் புரிந்து கொண்டு பொறுப்புடன் இருக்கின்றன என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தியாவின் கொள்கைகள் இந்த அடிப்படையில் தான் வகுக்கப்படுகின்றன. “வசுதைவ குடும்பகம்” என்று பொருள்படும் உலகம் ஒரே குடும்பம் என்ற எங்களது வெகு காலத்தைய நம்பிக்கையை இது உணர்த்துகிறது.

இளைஞர்களுக்கு திறன் மற்றும் கல்வி அளிப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த இயலும்.

அடுத்த நாற்பது ஆண்டுகளில் ஆசிய நாட்டின் 300 கோடி மக்கள் வளமான நிலைக்கு உயர்த்தப்படுவார்கள். நம்மிடம் உள்ள குறிப்பிட்ட அளவான வளங்களைக் கொண்டு ஆசியாவில் வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க வேண்டியது அவசியம்.

ஆகவே, பொருளாதார வளர்ச்சி ஏற்படும் போது நமது செயல்பாடுகளில் கவனம் தேவையாக உள்ளது.

ஆகவேதான், மக்களுடைய வாழ்க்கை முறை மாற வேண்டும் என்றும், வளர்ச்சிக்கு புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் நான் அடிக்கடி கூறி வருகிறேன். இது எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைமுறைப்படுத்தப்பட முடியும் என்று நான் நம்புகிறேன்.

புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை ஆசிய நாடுகள் தயாரித்து திறமையுடன் பயன்படுத்த வேண்டும்.

இயற்கைக்கு பெருமிதிப்பு கொடுப்பது நமது பாரம்பரியம். தட்பவெட்ப நிலை மாற்றத்திற்கு எதிராக போரிடுவது நமது சுய விருப்பத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்.

ஆகவேதான் இந்தியா 175 ஜிகா வாட் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை அடுத்த ஐந்து ஆண்டுகளில் தயாரிக்க இலக்கு நிர்ணயித்த்து.

வரும் ஆண்டுகளில், நிலக்கரி மற்றும் கச்சா எண்ணை ஆகியவைதான் முக்கிய வளங்களாக கருதப்படுகின்றன. இவற்றை நாம் பயன்படுத்தும் போது இயற்கைக்கு எவ்வித்தத்திலும் பாதகம் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டியது அவசியம்.

நமது மண்டலத்தில் விவசாயத்தை மேம்படுத்த புதிய தொழில் நுட்பங்களை புகுத்தாமல் இருந்தால் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நாம் காண இயலாது.

நம்மிடையே கிராம பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை ஒரே மாதிரியாக உள்ளன. ஒருவருக்கொருவர் இவற்றை கற்றுக் கொண்டிருப்பது என்பது நீண்ட வரலாறு.

2025ஆம் ஆண்டு, பெரும்பாலான ஆசிய மக்கள் நகரங்களில் தான் வசிப்பார்கள். ஆசியாவில் உள்ள பல நகரங்களில் உலகின் ஒரு சில நாடுகளில் உள்ள மக்கள் தொகையைவிட அதிக மக்கள் தொகை இருக்கும். அச்சமயம் உலகில் நகரங்களிடையே காணப்படும் மக்கள் தொகையில் 11 சதவீதத்திற்கும் மேலான மக்கள் இந்தியாவில் இருப்பார்கள் என்று ஒருசில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஆகவே, நகரங்களில் வாழும் மக்களுக்கு தேவையான நிலையான வசதிகளை அளிக்க வேண்டியது நமது குறிக்கோளாகும்.

ஆகவேதான் இந்தியாவின் நகரங்களை சீரமைப்பது மற்றும் நவீன நகரங்களை அமைப்பது ஆகியவற்றிற்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். மேலும், சியோல் போன்ற நகரங்கள் குறித்து நாம் அறிய வேண்டியது மிக அதிகமாகும்.

ஆசிய நாடுகள் ஒரு முகமாக வளர்ச்சி பெற வேண்டுமெனில் மண்டல அளவிலான நோக்கத்தை நாம் கைவிட வேண்டும். ஆனால், இன்று மேற்காசிய நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடல்களில் ஏற்படும் நிகழ்வுகள் ஆசிய நிலப்பரப்புகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஆசியா கண்டத்தில் இந்தியா ஒரு பகுதியில் அமைந்துள்ளது. நாடுகளுக்கிடையே தொடர்பு ஏற்படுத்த நாங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

மண்டலங்களில் கட்டமைப்பு வசதி வர்த்தகம் மற்றும் மூலதனங்கள் மூலம் ஒன்றிணைப்போம்.

ஆசியாவில் நிலையான அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்,.

இந்த ஆண்டு இரண்டு போர்களில் இந்தியா பங்கேற்றதன் 100வது மற்றும் 70வது ஆண்டை அனுசரிக்க உள்ளோம். அமைதி என்பது முடியாதது அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளுடன் கூட்டுறவு முறையில் அமைப்புகளை ஏற்படுத்துவோம்.

நமது கடல் பிராந்தியம் விண்வெளி போன்றவற்றை மக்களுக்கு பயன்படும் வகையில் ஒன்றிணைந்து செயல்படுத்துவோம். இதற்கு ஒவ்வொரு நாடும் பொறுப்பானதாகும்.

தீவிரவாதம் நாடு கடந்து புரியும் குற்றங்கள் இயற்கைச் சீற்றங்கள், நோய் நொடிகள் ஆகிய சவால்களை ஒருங்கிணைந்து நாம் எதிர்கொள்ள வேண்டும்.

ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் வலுவானவையாக இருந்தாலும் சில காரணங்களால் அதன் நிலை மாறுகின்ற தன்மையும் ஏற்படுகிறது.

ஆனால், உலகில் பல்வேறு நாடுகளுக்காக பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையும் உள்ளது.

உலக விவகாரங்கள் ஆசிய நாடுகள் அதிக அளவு பங்கை ஆற்ற வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் பாதுகாப்பு கவுன்சில் உட்பட உலகின் பல்வேறு அமைப்புகளின் ஆட்சியை மேலும் சீரமைக்க ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்களான நாம் செயல்பட வேண்டும்.

ஆசிய நாடுகளிடையே எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாமல் ஒன்றுபட்டு இருப்பது அவசியம். ஆசிய நாடுகளின் ஒற்றுமை உலகத்திற்கு ஒரு பாடமாக இருக்கும்.

முடிவாக நான் இதை கூற விரும்புகிறேன்.

மதம், கலாச்சாரம், அறிவு மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் ஆசிய நாடுகள் தொடர்பு கொண்டுள்ளன என்பதை வரலாறு கூறும். ஆசிய கண்டம் உலகுக்கு பலவற்றை அளித்துள்ளது. பெருமைமிக்க மதங்கள், தேயிலை, அரிசி போன்ற உணவுப் பொருட்கள் மனிதர்களால் உருவாக்கப் பட்ட சிறந்த படைப்புகள், கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஆசிய நாடுகள் அளித்துள்ளது.

காலணி ஆட்சி முறை மற்றும் மாபெரும் போர்கள் ஆகியவற்றிலிருந்து நாம் மீண்டு எழுந்துள்ளோம்.

ஆசிய நாடுகளின் வலிமையையும் நாம் கண்டுள்ளோம்.

குறிப்பிட்ட குறிக்கோளுக்காக நமது கலாச்சாரம் பண்டய காலம் முதல் வழி வழியாக வந்த அறிவு இளைஞர்களின் ஆற்றல் ஆகியவற்றை நாம் பயன்படுத்த வேண்டும்.

இது நமக்காகவும், உலகுக்காகவும்.

நன்றி, உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

*********