இத்தாலி ரோம் நகரில் 2021 அக்டோபர் 30ம் தேதி நடந்த, ஜி-20 உச்சிமாநாட்டுக்கு இடையே சிங்கப்பூர் பிரதமர் மேதகு திரு. லீ சேன் லூங்குடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
கொரோனா பெருந்தொற்றுக்குப்பின். அவர்கள் இடையே நடைபெறும் முதல் நேரடி சந்திப்பு இது. பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் உலகளாவிய முயற்சிகள் மற்றும் நடைபெறவுள்ள சிஓபி-26 மாநாடு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். தடுப்பூசி செலுத்தும் முயற்சிகளை விரைவுபடுத்துவதன் மூலம், கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த தற்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் முக்கிய மருந்துகளின் விநியோகத்தை உறுதி செய்வதும் குறித்து அவர்கள் ஆலோசித்தனர். கொவிட் இரண்டாம் அலை சமயத்தில், இந்தியாவுக்கு உதவி அளித்த சிங்கப்பூரின் நடவடிக்கையை பிரதமர் பாராட்டினார். இந்தியாவில் விரைவான தடுப்பூசி நடவடிக்கை மேற்கொண்டதற்காக பிரதமர் மோடியை, பிரதமர் லீ வாழ்த்தினார்.
இரு நாடுகள் இடையே இயல்பான மக்கள் போக்குவரத்தை விரைவில் ஏற்படுத்துவது உட்பட இருநாட்டு மக்கள் இடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.
*********
A fruitful meeting between Prime Ministers @narendramodi and @leehsienloong in Rome.
— PMO India (@PMOIndia) October 30, 2021
The two leaders reviewed the full range of the friendly ties between India and Singapore. pic.twitter.com/YJi7sRGNPR
Had an excellent meeting with PM @leehsienloong on ways to further scale-up the friendship between India and Singapore. Our talks focused on trade, culture and other subjects. pic.twitter.com/9lRue5dBfx
— Narendra Modi (@narendramodi) October 30, 2021