சிங்கப்பூர் துணைப் பிரதமர் திரு தர்மன் சண்முகரத்தினம் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ். ஆர். நாதன் மறைவுக்கு சிங்கப்பூர் மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைப் பிரதமர் தெரிவித்துக் கொண்டார். சிங்கப்பூர் தனது தலை சிறந்த மகன்களில் ஒருவரை இழந்துவிட்டதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
பல்வேறு பலதரப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள், குறிப்பாக திறன்மேம்பாடு மற்றும் அதிநவீன நகரங்கள் துறைசார்ந்த நடவடிக்கைகள் நிலவரம் குறித்து பிரதமருக்கு திரு சண்முகரத்தினம் எடுத்துரைத்தார்.
2015 நவம்பரில் சிங்கப்பூரில் தாம் மேற்கொண்ட பயணம் குறித்து பிரதமர் நினைவு கூர்ந்தார். அச்சமயம் இருதரப்பு உறவுகள் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளித்துவம் ஆக நிலை உயர்த்தப்பட்டது. வருங்காலத்தில் சிங்கப்பூர் பிரதமர் திரு லீ சீன் லூங் இந்தியாவுக்கு பயணமாக வருவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருப்பதாகப் பிரதமர் கூறினார்.
Mr. Tharman Shanmugaratnam, Deputy Prime Minister of Singapore calls on PM @narendramodi.
— PMO India (@PMOIndia) August 26, 2016
via NMApp pic.twitter.com/8sZIYlRpWH