Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிங்கப்பூரின் ஓய்வுபெற்ற மூத்த அமைச்சர் திரு கோ சோக் டோங்கை பிரதமர் சந்தித்துப் பேசினார்

சிங்கப்பூரின் ஓய்வுபெற்ற மூத்த அமைச்சர்  திரு கோ சோக் டோங்கை பிரதமர் சந்தித்துப் பேசினார்


சிங்கப்பூரில் ஓய்வுபெற்ற மூத்த அமைச்சர் திரு கோ சோக் டோங்கை பிரதமர் திரு நரேந்திர மோடி சிங்கப்பூரில் இன்று சந்தித்தார்.

ஓய்வுபெற்ற மூத்த அமைச்சர் திரு கோ சிங்கப்பூரில் “இந்தியா மீதான கவனத்தை  தொடங்கியதாகவும், அவர் சிங்கப்பூர் பிரதமராக இருந்தபோது, இந்தியா-சிங்கப்பூர் உறவுகளில் சிறப்பு கவனம் செலுத்தியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். அவரது முயற்சிகள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்தன என்று கூறினார். தாம் பிரதமராக பதவி வகித்த போதும், அதற்குப் பிறகும் இந்தியாவுக்கு அவர் அளித்த விலைமதிப்பற்ற ஆதரவுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்தியா-சிங்கப்பூர் நட்புறவுகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த கருத்துக்களை அவர்கள் பகிர்ந்து கொண்டதுடன், இருதரப்பு ஒத்துழைப்பை புதிய நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

***

IR/RS/KV