Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிக்கிம் ஆர்கானிக் திருவிழா 2016-ஐ தொடங்கிவைத்தார் பிரதமர், நீடித்த வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுக்கான தேசிய மாநாட்டின் நிறைவு விழாவில் உறையாற்றினார்.

சிக்கிம் ஆர்கானிக் திருவிழா 2016-ஐ தொடங்கிவைத்தார் பிரதமர், நீடித்த வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுக்கான தேசிய மாநாட்டின் நிறைவு விழாவில் உறையாற்றினார்.

சிக்கிம் ஆர்கானிக் திருவிழா 2016-ஐ தொடங்கிவைத்தார் பிரதமர், நீடித்த வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுக்கான தேசிய மாநாட்டின் நிறைவு விழாவில் உறையாற்றினார்.

சிக்கிம் ஆர்கானிக் திருவிழா 2016-ஐ தொடங்கிவைத்தார் பிரதமர், நீடித்த வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுக்கான தேசிய மாநாட்டின் நிறைவு விழாவில் உறையாற்றினார்.


பிரதமர் திரு நரேந்திர மோடி சிக்கிம் ஆர்கானிக் திருவிழா 2016 இன்று தொடங்கி வைத்தார். சிக்கிம் கேங்டாக்கில் நடைபெற்ற நீடித்த வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுக்கான தேசிய மாநாட்டின் நிறைவு விழாவிலும் அவர் உரையாற்றினார்.

மாநில வேளாண்மை அமைச்சர்கள், வேளாண்மை உற்பத்தி ஆணையர்கள் மற்றும் வேளாண்துறை செயலர்களின் பல்வேறு குழுக்கள் அளித்த ஐந்து அறிக்கைகள் பிரதமரிடம் அளிக்கப்பட்டன.

சிக்கிம் ஆர்கானிக் இலட்சினையை டிஐிட்டல் முறையில் பிரதமர் அறிமுகப்படுத்தினார். சிக்கிமில் உருவாக்கப்பட்ட மூன்று ஆர்க்கிட் வகைகளையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

முழு இயற்கை வேளாண்மையை நோக்கிய பயனத்திற்கான இரண்டு பாராட்டுக்களை சிக்கிம் மாநில முதலமைச்சர் திரு பவன் குமார் சம்லிங்கிடம் பிரதமர் வழங்கினார். 100 சதவிகித மண் வள அட்டைகளை எட்டியதற்காக சிக்கிமிலுள்ள இரண்டு மாவட்டங்களுக்கும் அவர் பாராட்டுகளை தெரிவித்தார்.

பிரதமர் தனது உரையில் சிக்கிம் மாநில முன்னாள் ஆளுநர் திரு. ராமாராவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் நல்வாழ்வுக்காக தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்ட சிக்கிம் முதலமைச்சர் திரு பவன் குமார் சம்லிங்கை அவர் பாராட்டினார்.

மாநிலம் சந்தித்து வரும் வளர்ச்சிக்கு இந்த தொலைநோக்கு பார்வையே காரணம் என்று அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் எழுப்பிய நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் மத்திய அரசால் கவனிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிக்கிம் மாநில விவசாயிகளின் விருந்தினராக தாம் சிக்கிமில் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்த மாநாட்டின் போது நடத்தப்பட்ட ஆலோசனைகள் நாட்டின் வேளாண்மைக்கான ஒரு புதிய முழுமையான தொலைநோக்குப் பார்வைக்கு வகை செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் இருந்து தேவையான பகுதிகளை அனைத்து மாநிலங்களும் தங்களுக்காக எடுத்துக் கொள்ளலாம் என்றும் இது சிக்கிம் பிரகடனமாக நினைவு கொள்ளப் பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இயற்கை வேளாண்மைக்காக பல்வேறு கடினங்கள் மற்றும் போராட்டங்களுக்கு எதிரான உறுதிக்கான எடுத்துக்காட்டாக சிக்கிம் திகழ்வதாகவும் பிரதமர் கூறினார். சிக்கிம் விவசாயிகள் மேற்கொண்ட இந்த முயற்சிகளை இன்றைய தினம் உலகம் முழுவதும் அங்கிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த முயற்சி நாடு முழுவதும் பரவும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாரிசில் சமீபத்தில் நடைபெற்ற சி.ஓ.பி.-21 மாநாட்டை நினைவு கூர்ந்த பிரதமர் இந்த மாநாட்டில் மீண்டும் அடிப்படைகளுக்கு திரும்பும் யோசனை பலமாக எழுப்பப்பட்டது என்றார். இயற்கையுடன் இயைந்து வாழும் நிலையை ஏற்கனவே சிக்கிம் பெற்றிருக்கிறது என்றும் எனவே இது இயற்கையை பாதுகாக்கும் வளர்ச்சிக்கான மாதிரி என்றும் கூறினார்.

இந்திய அரசு நடத்திய ஆய்வு ஒன்றில் பத்தாவது தூய்மையான நகரமாக காங்டோக் அறிவிக்கப்பட்டிருப்பதற்காகவும் பிரதமர் சிக்கிம் மாநிலத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.

100 சதவிகிதம் ஆர்கானிக் பகுதியாக மாற்ற வாய்ப்புள்ள மாவட்டம் அல்லது ஒரு வட்டத்தை அடையாளம் காணுமாறு பிரதமர் மாநிலங்களைக் கேட்டுக் கொண்டார்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டமான பிரதமமந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டம் பற்றி குறிப்பிட்ட பிரதமர் இந்தத் திட்டம் விவசாயிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றும் காப்பீட்டு உள்ளடக்கத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

மண் வள அட்டை போன்ற திட்டங்களுக்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். நாடு முழுவதும் மண் ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோடைக்கால விடுமுறையின்போது பள்ளி ஆய்வகங்களும் இதற்காக பயன்படுத்தப்படவேண்டும் அவர் கூறினார்.

கிசான் மொபைல் போன்ற சிறப்பு பொருட்களின் தேவை இருப்பதாக கூறிய அவர் இது விவசாயிகளின் தேவைகள் மற்றும் சிறப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் என்றார். தொடக்க நிறுவனங்கள் இந்தத் திசையில் முன்னிலையில் இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

குளிர் பானங்களில் சிறிதளவு பழச்சாறு கலக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சிக்கிமில் கட்டப்படும் விமான நிலையத்தின் மூலம் ஆர்கானிக் ஏற்றுமதிக்கு பெறும் ஊக்கம் கிட்டும் என்றும் அவர் தெரிவித்தார். வேளாண் உற்பத்திப் பொருட்களை சந்தைகளுடன் இணைப்பதும் கிராமப்புற சாலைகளின் பின் உள்ள தொலை நோக்குப் பார்வையில் உள்ளது என்றார். மரம் நடுதல் கால்நடை பராமரிப்பு ஆகியவை வேளாண் செயல்பாடுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் முற்போக்கான விவசாயிகளுக்கான டிஜிட்டல் தளம் உருவாக்கப்படவேண்டும் என்றும் பிரதமர் யோசனை தெரிவித்தார்.

•••••••