சாவித்ரிபாய் புலே, ராணி வேலு நாச்சியார் ஆகியோரின் ஜெயந்தியை முன்னிட்டு அவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
தங்கள் இரக்கம், துணிச்சலால் உத்வேகம் பெற்ற சமூகம், நமது நாட்டிற்கு அவர்களின் பங்களிப்பு விலைமதிப்பற்றது என்று திரு மோடி கூறியுள்ளார்.
சாவித்ரி பாய் புலே, ராணி வேலு நாச்சியார் குறித்து தமது கருத்துக்களை வெளிப்படுத்திய மனதின் குரல் நிகழ்ச்சியின் சில பகுதிகளையும் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“சாவித்ரி பாய் புலே, ராணி வேலு நாச்சியார் ஆகியோரின் பிறந்த தினத்தில் அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர்கள் இருவரும் தங்கள் இரக்கம், துணிச்சலால் சமூகத்திற்கு உத்வேகம் அளித்தனர். நமது நாட்டிற்கு அவர்களின் பங்களிப்பு விலைமதிப்பற்றது. சமீபத்திய மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர்கள் குறித்து குறிப்பிட்டு மரியாதை செலுத்தினோம்’’.
***
(Release ID: 1992563)
ANU/PKV/IR/AG/RR
Tributes to Savitribai Phule and Rani Velu Nachiyar on their Jayanti. Both of them inspired society with their compassion and courage. Their contribution towards our nation is invaluable. Here is how we paid tributes to them during the recent #MannKiBaat. pic.twitter.com/hFfoAbWlqf
— Narendra Modi (@narendramodi) January 3, 2024