பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மத்திய பொறியியல் சேவை (சி.இ.எஸ்.)(சாலைகள்) பணிப் பிரிவை மறுஆய்வு செய்ய (Cadre Review) ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டம், உடனடியாக அமல்படுத்தப்படும்.
சி.இ.எஸ். (சாலைகள்) பணிப் பிரிவு அளவு, கீழ்க்கண்டவாறு மாற்றியமைக்கப்படுகிறது:-
(அ) ஹெச்.ஏ.ஜி. நிலை – 02
(ஆ) எஸ்.ஏ.ஜி. நிலை – 05
(இ) ஜே.டி.எஸ். நிலை – 36
மத்திய பொறியியல் சேவை (சாலைகள்) பணிப் பிரிவு, 1959-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. குழு ஏ தொழில்நுட்பப் பணிகளுக்கான முதலாவது ஒதுக்கீடு 189-ஆக 1976-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. இந்த சேவையில், கடைசியாக பணிப்பிரிவு மறுஆய்வுப் பணிகள், 1987-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
இயந்திரவியல் பணிப் பிரிவில் காலியாகும் பணியிடங்கள், சிவில் என்ஜினியர்களைக் கொண்டு நிரப்பப்படும். இதற்காக இயந்திரவியல் பிரிவை சிவில் பணிப்பிரிவுடன் படிப்படியாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம், தற்போதைய பதவிநிலையில், எந்த மாற்றமும் ஏற்படாது.
இந்த பணிப்பிரிவு மறுஆய்வுத் திட்டத்தால், ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1.8 கோடி செலவு பிடிக்கும். வேறு இடங்களுக்கு மாற்றுவதற்காக சிறப்பு இருப்பாக பணியாளர்களை தேர்வுசெய்வதால், கூடுதல் செலவு எதுவும் பிடிக்காது.
***