Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சார்க் உறுப்பு நாடுகளுக்கு இடையே நாணய பரிமாற்ற ஏற்பாட்டுக்கான கட்டமைப்பின் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வசதியின் ஒட்டுமொத்த வடிவமைப்பு 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான காத்திருப்பு பரிமாற்றத்தை உள்ளடக்கியது.


சார்க் உறுப்பு நாடுகளுக்கு இடையே நாணய பரிமாற்ற ஏற்பாட்டுக்கான கட்டமைப்பின் திருத்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த காலத்தை உள்ளடக்கிய ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த வசதி ஒட்டுமொத்த வடிவமைப்பிற்குள் 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான காத்திருப்பு பரிமாற்றத்தை உள்ளடக்கியது. அதோடு சார்க் உறுப்பு நாடுகளின் நிபந்தனைகளின் உரிய பரிசீலனை மற்றும் இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளின் அடிப்படையில், இயக்க முறையைப் பொறுத்தவரை அதற்கான உள்ளடக்கிய நெகிழ்வும், பரிமாற்றத்தின் கால அளவும், அதன் ஓட்டமும் இவற்றில் அடங்கியுள்ளன.

முக்கியக் கூறு:

அதிகப்படியான நிதிசார்ந்த நிச்சயமற்ற நிலை மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தின் சார்க் நாடுகளின் குறைந்த கால பரிமாற்றத் தேவைகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கும். ஒப்புதல் வழங்கப்பட்ட சார்க் பரிமாற்ற கட்டமைப்பில் காத்திருப்பு பரிமாற்றம் இணைக்கப்பட்டிருப்பது, கட்டமைப்பிற்கு தேவையான நெகிழ்வுத் தன்மையை வழங்கும். அதோடு சார்க் உறுப்பு நாடுகளின் நாணயக் கோரிக்கைகள் மீது இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்க இது வழிவகுக்கும். தற்போது சார்க் பரிமாற்ற கட்டமைப்பின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள பரிமாற்ற நாணய அளவை தாண்டுவதற்கும் இது ஏதுவாக இருக்கும்.

***