Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சாகிப்சாதா ஸோராவர் சிங், சாகிப்சாதா பத்தே சிங் தியாகத்தைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 26-ம் தேதியை வீர் பால் தினமாக பிரதமர் அறிவித்தார்


ஶ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் பர்காஷ் புரப் புனிதமான தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி, சாகிப்சாதா ஸோராவர் சிங், சாகிப்சாதா பத்தே சிங் தியாகத்தைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 26-ம் தேதியை வீர் பால் தினமாக அறிவித்தார்.

தொடர் டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது;

‘’ இன்று, ஶ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் பர்காஷ் புரப் புனித நாளையொட்டி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிசம்பர் 26-ம் தேதி வீர் பால் தினமாக அறிவித்து பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன். இது சாகிப்சாதாக்களின் துணிச்சலுக்கும், நீதிக்கான அவர்களது தாகத்துக்கும் பொருத்தமான மரியாதையாகும்.

சாகிப்சாதா ஸோராவர் சிங், சாகிப்சாதா பத்தே சிங் ஆகியோர் ஒரு சுவரில் உயிருடன் அடைக்கப்பட்டு உயிர்த்தியாகம் புரிந்த அதே நாள் வீர் பால் தினமாக அனுசரிக்கப்படும். தர்மா என்னும் புனிதமான கொள்கைக்காக, அதிலிருந்து வழுவாமல், இந்த இருவரும் இறப்பை தேர்வு செய்தனர்.

மாதா குஜ்ரி, ஶ்ரீ குரு கோவிந்த்ஜி மற்றும் 4 சாகிப்சாதாக்களின் தீரமும்,லட்சியங்களும் லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமையை அளிக்கிறது. ஒரு போதும், அநீதிக்கு அவர்கள் தலைவணங்கியதில்லை. அனைவரையும் அரவணைத்து செல்லும் நல்லிணக்கம் கொண்டதாக உலகத்தை அவர்கள் கண்டனர். அவர்களைப் பற்றி அதிகம் பேர் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் மிக்க தருணம் இது’’

****