Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர் சீவூசாகுர் ராம்கூலம், சர் அனிரூத் ஜூக்நாத் ஆகியோரின் நினைவிடங்களில் பிரதமர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்


பம்பிள்மௌசஸ் தாவரவியல் பூங்காவில் உள்ள சர் சீவூசாகுர் ராம்கூலம் மற்றும் சர் அனிரூத் ஜூக்நாத் ஆகியோரின் நினைவிடங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். அப்போது மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலமும் பிரதமருடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மொரீஷியஸின் முன்னேற்றம் மற்றும் இந்தியா-மொரீஷியஸ் உறவுகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதில் இரு தலைவர்களின் நீடித்த மரபுகளை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, பிரதமர் திரு. நரேந்திர மோடி, மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன்சந்திர ராம்கூலம் ஆகியோர் வரலாற்றுச் சிறப்புமிக்க பூங்காவில் “தாயின் பெயரில் ஒரு மரக்கன்று” என்ற முன்முயற்சியின் கீழ் ஒரு மரக்கன்றை நட்டனர்.

***

(Release ID: 2110202)
TS/IR/RR/KR