Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்


பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தத் தருணத்தில், கடினமாக உழைக்கும் அனைத்துப் பொறியாளர்களுக்கும் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதிலும்,  தேசத்திற்கு சேவை செய்வதிலும் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா தொடர்ந்து பல தலைமுறைகளைத் ஊக்குவிப்பார் என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், தமது பயணத்தின் போது சிக்கபல்லாபுராவில் சர்.எம். விஸ்வேஸ்வரய்யாவுக்கு மரியாதை செலுத்திய காட்சிகளையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் கூறியிருப்பதாவது:

“பொறியாளர்கள் தினத்தன்று #EngineersDay, தொலைநோக்குப் பார்வை கொண்ட பொறியாளரும், ராஜீயவாதியுமான சர்.எம். விஸ்வேஸ்வரய்யாவுக்கு மரியாதை செலுத்துகிறோம். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதிலும்,  தேசத்திற்கு சேவை செய்வதிலும் அவர் தொடர்ந்து பல தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிக்கபல்லாபுராவிற்கு நான் சென்றிருந்தபோது அவருக்கு மரியாதை செலுத்திய காட்சிகளை இங்கு பகிர்கிறேன்.”

“பொறியாளர்கள் தினத்தை #EngineersDay முன்னிட்டு, கடினமாக உழைக்கும் பொறியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! அவர்களின் புத்தாக்க சிந்தனையும், அயராத அர்ப்பணிப்பும் நமது நாட்டின் முன்னேற்றத்தின் முதுகெலும்பாக உள்ளன. உள்கட்டமைப்பு அதிசயங்கள் முதல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வரை, அவர்களின் பங்களிப்புகள், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.”

***

SRI/BR/AG