Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச விசாகதினகொண்டாட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் உரை

சர்வதேச விசாகதினகொண்டாட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் உரை

சர்வதேச விசாகதினகொண்டாட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் உரை

சர்வதேச விசாகதினகொண்டாட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் உரை


பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், இன்று கொழும்பு, பண்டாரநாயக நினைவு பன்னாட்டு மாநாட்டுகூடத்தில் நடைபெற்ற சர்வதேச விசாகதினகொண்டாட்டங்களின் துவக்க விழாவில் உரையாற்றினார்.

நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த பிரதமரை இலங்கை அதிபர் திரு.மைத்ரிபாலசிறீசேன மற்றும் இலங்கை பிரதமர் திரு.ரணில்விக்ரமசிங்க ஆகியோர் வரவேற்றனர். மண்டபத்தின் நுழைவாயிலில்சம்பிரதாய விளக்கை ஏற்றி வைத்த பிரதமரை கலாச்சாரமேளவாத்தியக்காரர்கள் மற்றும் பாரம்பரியநடனக்கலைஞர்களும் வரவேற்றனர்.

5 புத்த கட்டளைகள் வாசிப்புடன் நிகழ்ச்சி துவங்கியது. வரவேற்புரைஆற்றிய இலங்கை புத்தசாசன மற்றும் நீதித் துறை அமைச்சர் திரு.விஜயதாசராஜபக்சே, மோடி அவர்களை குறிப்பிட்டு, “இலங்கையில் உள்ள எங்களுக்கு, நீங்கள் எங்களில் ஒருவர்” என்றார்.

இலங்கை அதிபர் திரு.மைத்ரிபாலசிறீசேன, இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி பங்கேற்றுள்ளது மிகவும் அதிர்ஷ்டகரமானது என்றார். இரு நாடுகளுக்கு இடையேயான பண்டைய உறவுகள் குறித்து பேசிய அவர், விசாகதினத்தில் பிரதமர் திரு.மோடியின்பங்கேற்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், உலகம் முழுதும் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்றார். மேலும் அதிபர், அவர் நட்புறவு மற்றும் அமைதிக்கான செய்தியை எடுத்து வந்துள்ளதாகவும் கூறினார்.

தனது உரையில் பிரதமர் திரு.மோடி அவர்கள், புத்தரின் பிறப்பு, அறிவொளி மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூறும் புனித தினங்களாகவெசாகை விவரித்தார். அவர். இத்தினம், உயரிய உண்மை மற்றும் தாமாவின்காலமற்ற தொடர்பு மற்றும் நான்கு உன்னத உண்மைகளைகுறிப்பதாகும் என்றார்.

கொழும்பில், சர்வதேச விசாகதினகொண்டாட்டங்களில் தம்மை சிறப்பு விருந்தினராகஅழைத்ததற்காகஅதிபர் திரு.மைத்ரிபாலசிறீசேன மற்றும் பிரதமர் திரு.ரணில்விக்ரமசிங்க மற்றும் இலங்கை மக்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன் எனக் கூறினார்.

“இந்த சிறப்புமிக்க தருணத்தில், நான் என்னுடன் சம்யக்-சம்புத்தா, முழுமையாக சுயவிழிப்பு பெற்ற ஒருவர் நிலத்திலிருந்து125 கோடி மக்களின் வாழ்த்துக்களையும் கொண்டு வந்துள்ளேன்,” என பிரதமர் தெரிவித்தார்.

பிரதமரின் உரையிலிருந்து முக்கியமானவைகீழே இடம் பெற்றுள்ளன:

இளவரசர்சித்தார்த்தர் புத்தர் ஆன இந்தியாவில் உள்ள புத்தகயா, புத்தமதஉலகிற்கு புனித மையமாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் நான் கவுரமாக இடம் பெறுள்ளதொகுதியானவாரணாசியில்புத்தரின் முதல் சொற்பொழிவு, தர்மத்தின்சக்கரத்தை சுழல வைத்தது.

எங்கள் முக்கிய தேசிய குறியீடுகள்புத்த மதத்தின் தூண்டுதலினால்ஏற்பட்டவை.

புத்தம் மற்றும் அதன் பல்வேறு கிளைகள் நமது ஆட்சி, கலாச்சாரம் மற்றும் தத்துவங்களில் ஆழ்ந்து ஊன்றியுள்ளன.

இந்தியாவிலிருந்து பரப்பப்பட்ட புத்தத்தின் இறை நுகர்வு உலகின் அனைத்து பகுதிகளுக்கும்பரவியுள்ளது.

அசோகசக்கரவர்த்தியின், தவக்குழந்தைகளானமகேந்திரா மற்றும் சங்கமித்ரா, தர்மத்தை கொடையாக அளிக்க இந்தியாவிலிருந்து இலங்கைக்குதர்மதூதர்களாக பயணம் மேற்கொண்டனர்.

இன்று, இலக்கைபுத்தரின் உபதேசங்கள் மற்றும் கற்றலுக்கு மிக முக்கிய இடமாக உள்ளதற்கு பெருமை கொண்டுள்ளது.

நூற்றாண்டுகளுக்கு முன்பு, அனகாரிகாதர்மபாலா, இந்த முறை, தோன்றிய இடத்தில் புத்தரின் உணர்வை புதுப்பிக்கஇலங்கையிலிருந்து இந்தியாவிற்கு, அத்தகைய பயணத்தை மேற்கொண்டார்.

சில வகையில், நீங்கள் எங்ளை எங்களது சொந்த வேர்களுக்கு கொண்டு சென்றுள்ளீர்கள்

புத்தபராம்பரியத்தின் சில முக்கிய கூறுகளை பாதுகாத்து வருவதற்காக உலகம் இலங்கைக்குநன்றிக்கடன்பட்டுள்ளது.

உடைக்கமுடியாதபகிர்ந்துக்கொள்ளத் தக்க புத்தபாரம்பரிய்த்தைகொண்டாடுவதற்குவிசாகதினம் ஒரு சந்தர்ப்பமாகும்.

பல்வேறு சந்ததியினர் மற்றும் நூற்றாண்டுகளாக நமது சமூகத்தை இணைத்து வைத்துள்ள பாரம்பரியம்.

இந்தியா மற்றும் இலங்கைக்குஇடையேயான நட்புறவு காலத்தால்“பெரும் ஆசிரியர்”-ஆல் உருவாக்கப்பட்டது.

பவுத்தம் நமது உறவை எப்போது மிளிர வைத்து வருகிறது.

நெருங்கிய அண்டைநாடுகளாக, நமது உறவு பல்வேறு நிலைகளில் பரவியுள்ளது.

அதன் சக்திகள் நம்மில் உள்ளடங்கியபௌத்தத்தின்மாண்புகளால் கவரப்பட்டு, நமது பரிமாற்றப்பட்டஎதிர்காலத்திற்குஎல்லையில்லாவாய்ப்புகளை அளித்துள்ளது.

நமது நட்புறவு நமது மக்களின் இதயங்களிலும், நமது சமூகத்தின்நூலிழையிலும் வாழ்ந்து வருகிறது.

புத்தபாரம்பரியத்துடனான நமது உறவைகவுரவிக்கவும், ஆழப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், ஏர் இந்தியா கொழும்பு மற்றும் வாரணாசி இடையே நேரடி விமான சேவையை துவங்கும் என அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

இலங்கையிலுள்ள எனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகள்புத்தரின்நிலத்திற்கு எளிதாக பயணம் மேற்கொள்ள இது உதவும்  மற்றும் நீங்கள் நேரடியாக ஸ்ராவஸ்தி, குசிநகர், சங்காசா, கவுஷாம்பி மற்றும் சார்நாத் செல்ல உதவும்.

எனது தமிழ்ச் சகோதரர்கள் வாரணாசி சென்று, காசி விஸ்வநாதரைதரிசிக்கலாம்.

இலங்கையுடனான நமது உறவிற்கான முக்கிய வாய்ப்பளிக்கும் தருணத்தில் நாம் இருப்பதாக நான் நம்புகிறேன்.

பல்வேறு துறைகளில் நமது கூட்டமைப்பை மிகப்பெரிய அளவில் உயர்த்தக்கூடியவாய்ப்பைபெற்றுள்ளோம்.

மற்றும், எங்களை பொறுத்தவரை, நமது நட்புறவின்வெற்றிக்கான முக்கிய தொடர்புடைய குறியீடு, உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றியாகும்.

இலங்கை சகோதர,சகோதரிகளின் பொருளாதார வளத்திற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

நமது வளர்ச்சி கூட்டுறலைஆழப்படுத்தும் வகையில் நாங்கள், நன்மைபயக்கும் மாற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கானமுதலீடுகளை தொடர்ந்து செய்து வருவோம்

 

நமது சக்தி நமது அறிவு, திறன் மற்றும் வளத்தைபகிர்வதில் உள்ளது.

வணிகம் மற்றும் முதலீட்டில், நாம் குறிப்பிடத்தக்க பங்குதாரர்கள்.

நமது எல்லைகளை தாண்டிய தடையில்லா வணிகம், முதலீடுகள், தொழில்நுட்பம் மற்றும் சிந்தனைகள்பரஸ்பர நன்மை அளிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

இந்தியாவின் துரிய வளர்ச்சி இப்பகுதிமுழுமைக்கும், குறிப்பாக இலங்கைக்கு, நன்மையளிக்கும்.

உள்கட்டமைப்பு மற்றும் தொடர்புகளில், போக்குவரத்து மற்றும் சக்தி ஆகியவற்றில், நமது கூட்டுறவை உயர்த்த நாம் தயராக உள்ளோம்.

விவசாயம், கல்வி, உடல்நலம், மறுகுடியமைப்பு, போக்குவரத்து, மின்சாரம், கலாச்சாரம், நீர், இருப்பிடம், விளையாட்டு மற்றும் மனிதவள ஆதாரங்கள் உள்ளிட்ட மனித செயல்பாடு தொடர்புடைய அனைத்து துறைகளிலும் நமது வளர்ச்சி கூட்டு பரவியுள்ளது.

இன்று, இலங்கையுடனான இந்தியாவின் வளர்ச்சி கூட்டுறவு 2.6 பில்லியன்அமெரிக்கடாலராக உள்ளது.

மற்றும், அதன் முக்கிய நோக்கம், இலங்கை அதன் மக்கள் அமைதி, வளம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நனவாக்குவதற்குஉதவுவதாகும்.

ஏனெனில், இலங்கை மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக நலம் 1.25 இந்தியர்களுடன்தொடர்புள்ளது.

ஏனெனில், நிலம் அல்லது இந்திய பெருங்கடல் தண்ணீர் எதுவாக இருப்பினும், நமது சமூகங்களின்பாதுகாப்பைபிரிக்கமுடியாதது.

அதிபர் திரு.சிறீசேன மற்றும் பிரதம மந்திரி திரு.விக்ரமசிங்கஆகியோருடனான எனது பேச்சுவார்த்தைகள் நமது பொதுவான இலக்குகளைஅடைவதற்கு நமது கரங்களின் இணையும் விருப்பத்தை உறுதியாக்கியுள்ளது.

உங்கள் சமூகத்திற்கான நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய தேர்வுகளை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது, நீங்கள் இந்தியாவை, உங்கள் தேசத்தை கட்டமைக்கும்முயற்சிகளுக்கு உதவும் நண்பராகவும், பங்குதாரராகவும் இருப்பதை காண்பீர்கள்.

இரண்டு அரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக கூறப்பட்ட புத்தரின் செய்தி இன்றைக்கு தொடர்புள்ளதாக உள்ளது.

புத்தர் காட்டிய நடுபாதை, நம் அனைவருக்காகவும் பேசும்.

அதன் உலகத்தன்மை மற்றும் பசுமையான இயல்பு தாக்குகிறது.

அது நாடுகளிடையே ஒற்றுமை உண்டாக்கும் சக்தியாக உள்ளது.

தெற்கு, மத்திய, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள், புத்தரின்நிலத்துடனான தமது புத்ததொடர்புகளுக்காக பெருமை கொள்கிறது.

விசாகதினத்திற்காக தேர்வு செய்யப்பட்ட தலைப்புகளான சமூக நீதி மற்றும் நிலையான உலக அமைதி, புத்தரின்போதனைகளுக்கு ஆழ்ந்த உணர்வூட்டுவதாக உள்ளன.

தலைப்புகள் தனித்தனியாக தெரியலாம்.ஆனால், அவை ஒன்றொடு ஒன்று சார்ந்தததும், தொடர்புடையதாகும்.

சமூகநீதி பிரச்சினை சமுதாயத்திற்கு இடையே மற்றும் உள்ளேயானசண்டைகளுடன்தொடர்புள்ளது.

இது முக்கியமாக தான்ஹா அல்லது சமஸ்கிருதத்தில்த்ரிஷ்னா, தாகத்திலிருந்து உருவாகி, பின் அது பேராசையிலிருந்துஉருவாகிறது.

பேராசை, மனிதசமூகத்தை நமது இயற்கை வசிப்பிடத்தை ஆதிக்கம் செலுத்தவும்சிதைக்கவும் விரும்புகிறது.

நமது தேவைகளை அடைவதற்கான நமது விருப்பம், சமுதாயங்களிடையே வருவாய் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறது.

அதுபோன்றே, இன்று நிலையான உலக அமைதிக்கான பெரும் சவால் நாடுகளுக்கு இடையேயானமோதல்கள்தேவைப்படவில்லை.

அது வெறுப்பு மற்றும் வன்முறை சிந்தனையில்வேரூண்றியமனங்களிலிருந்து, சிந்தனைகள், உரிமைகள் மற்றும் கருவிகளிலிருந்து வருகிறது.

நமது பகுதியில் உள்ள தீவிரவாத பிரச்சினை இந்த அழிவு உணர்விற்கான உறுதியான வெளிப்பாடாக உள்ளது.

நமது பகுதியில் இத்தகைய வெறுப்பு சிந்தனைகள் மற்றும் அதனை பரப்புபவர்கள்பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்பது சோகமானது. எனவே, இறப்பு மற்றும் அழிவிற்குவழிவகுக்குகிறார்கள்.

உலகம் முழுவதும் வளர்ந்து வரும் வன்முறைகளுக்குபௌத்தத்தின்அமைத்திக்கானசெய்தியேவிடையாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

மேலும், மோதல்இல்லாவிட்டால்மட்டும் அமைதிநிலவும் என்றகருத்துஅல்ல.

ஆனால், கருணை மற்றும் ஞனம் ஆகியவற்றின் அடிப்படையில், பேச்சுவார்த்தை, ஒற்றுமை மற்றும் நீதி ஆகியவற்றைஊக்குவிப்பதற்கானஅனைத்துசெயல்களிலும்ஈடுபடும்செயல்மிக்கஅமைதிக்காக நாங்கள் பணியாற்றுவோம்.

புத்தர்சொன்னதைபோன்று, “சமாதானத்தைவிடஉயர்ந்தபேரின்பம்ஏதும் இல்லை”.

விசாகத்தை முன்னிட்டு, புத்தர்புத்தரின்கொள்கைகளைஉயர்த்தி பிடித்து, நமது அரசுகளின் கொள்கைகள் மற்றும் நடத்தைகளில் அமைதி, இருப்பிடம், உள்நோக்கம்மற்றும்இரக்கம் ஆகிய மாண்புகளைஊக்குவிப்பதற்காகஇந்தியாமற்றும்இலங்கைஒன்றாகஇணைந்துசெயல்படும் என நான் நம்புகிறேன்.

இதுவே, தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள், நாடுகள் மற்றும் உலகம்பேராசை, வெறுப்பு மற்றும் அறியாமை ஆகிய மூன்று கொடிய விஷங்களிலிருந்து விடுபட்டுசுதந்திரமடைவதற்கான நேர்மையான பாதையாக இருக்கும்.

புனித தினமானவிசாகம், நாம் அறிவு என்ற விளக்குகளை ஏற்றி இருளில் இருந்து வெளி வருவோம்: நாம் நமக்குள்ளே ஆழ்ந்து பார்போம்; மற்றும் நாம் எதையும் உயர்த்தி பிடிக்க வேண்டாம், உண்மையைத் தவிர.

மேலும், உலகிற்கே ஒளி வீசும் புத்தரின்பாதைகளை பின்பற்ற நமது முயற்சிகளைஅர்பணிப்போம்.

தர்மபாதையில்387வது வசனம் கூறுவது போல:

பகலில் சூரியன் ஒளிவீசுகிறது,

இரவில் நிலவு விளக்கேற்றுகிறது,

போர்வீரன் தனது கவசத்தில்ஜொலிக்கிறான்,

பிராமணன்தியானத்தில்பிரகாசிக்கிறான்,

ஆனால், விழித்துஎழுந்தவர், பகல்முழுவதும்ஒளி வீசி, இரவிலும் பிரகாசிக்கிறார்.

உங்களுடன் இருக்கும் கவுரம்பெற்றமைக்காக உங்களுக்கு மீன்டும் ஒரு முறை நன்றி.

இன்று மதியம் கண்டியில் உள்ள, புனிதப் பல் உள்ள கோவில், ஸ்ரீ தாலடாமலிகவவில் மரியாதை செலுத்த உள்ளதை எதிர்நோக்குகிறன்.

நம் அனைவரையும் புத்தர், தாமா மற்றும் சங்கா ஆகிய மூன்று முத்துக்கள்ஆசிர்வதிக்குமாக