Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகளிர் சக்தியின் வலிமை, தைரியம் மற்றும் மீள்திறனுக்கு அவர் வணக்கம் செலுத்தியதோடு, பல்வேறு துறைகளில் அவர்களின் சாதனைகளையும் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்   கூறியிருப்பதாவது;

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்! நமது மகளிர் சக்தியின் வலிமை, தைரியம் மற்றும் மீண்டெழும் திறனுக்கு நாம் வணக்கம் செலுத்துவதுடன், பல்வேறு துறைகளில் அவர்களின் சாதனைகளையும் பாராட்டுகிறோம். கல்வி, தொழில்முனைவு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் பலவற்றில் முன்முயற்சிகள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க நமது அரசு உறுதிபூண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நாங்கள் செய்த சாதனைகளிலும் இது பிரதிபலிக்கிறது.

***

PKV/BS/AG/KV