Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண் சாதனையாளர்களிடம் தமது சமூக ஊடக தளங்களின் நிர்வாகத்தைப் பிரதமர்


பெண்களின் சக்திக்கும் சாதனைகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சமூக ஊடக தளங்களை நிர்வகிக்கும் பொறுப்பை, பல்வேறு துறைகளில் முத்திரை பதித்துள்ள பெண்களுக்கு வழங்கியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தன்று, பெண் சாதனையாளர்கள் பிரதமரின் சமூக ஊடக தளங்களில் தங்கள் அனுபவங்களையும் நுண்ணறிவுகளையும் பகிர்ந்து கொள்ள பெருமையுடன் தளத்தில் உள்ளனர்.

இது குறித்து பிரதமரின் சமூக ஊடக எக்ஸ் கணக்கில் பெண் சாதனையாளர்கள் வெளியிட்டுள்ள பதிவு:

“விண்வெளி தொழில்நுட்பம், அணுசக்தி தொழில்நுட்பம், பெண்களுக்கு அதிகாரம்…

நாங்கள் அணு விஞ்ஞானிகள் எலினா மிஸ்ரா, விண்வெளி விஞ்ஞானி ஷில்பி சோனி.  மகளிர் தினத்தில் ( #WomensDay ) பிரதமரின் சமூக ஊடக தளங்க்களை வழிநடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

எங்கள் செய்தி- இந்தியா அறிவியலுக்கு மிகவும் துடிப்பான இடமாகும். எனவே, அதில் ஈடுபட அதிகமான பெண்களை நாங்கள் அழைக்கிறோம்.”

***

PLM/DL