Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்


சர்வதேச மகளிர் தினத்தில் பெண் சக்திக்குத் தலை வணங்குவதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக தமது அரசு எப்போதும் பாடுபட்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே வாக்குறுதியளித்தபடி, இன்று (08.03.2025) தமது சமூக ஊடக கணக்குகள் பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் பெண்களால் நிர்வகிக்கப்படும் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

” மகளிர் தினத்தில் (  #WomensDay ) எங்கள் பெண் சக்திக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்! எங்களது திட்டங்கள், கொள்கைளைப் பிரதிபலிக்கும் வகையில், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக எங்கள் அரசு எப்போதும் பணியாற்றி வருகிறது.  வாக்குறுதியளித்தபடி, இன்று எனது சமூக ஊடக கணக்குகள் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்துள்ள பெண்களால் நிர்வகிக்கப்படும்!”

***

PLM/DL