புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சி 2023-ஐ மே 18ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாகவும், 47-வது சர்வதேச அருங்காட்சியக தினத்தைக் கொண்டாடும் விதமாகவும், இந்த சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. “அருங்காட்சியகங்கள்- நீடித்த நல்வாழ்வு” என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த ஆண்டு கண்காட்சி நடைபெறுகிறது. இந்தியாவின் கலாச்சார ராஜதந்திரங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் கலாச்சார மையங்களின் வெளிப்பாடாக இந்தக் கண்காட்சி அமையும்.
இந்த நிகழ்ச்சியில் சர்வதே அருகாட்சியகக் கண்காட்சியின் சின்னம், அருங்காட்சியகத்தின் ஒருநாள் வரைகலை நாவல், இந்திய அருங்காட்சியகங்களின் தொகுப்பு, அருங்காட்சியக அட்டைகள் மற்றும் கடமைப்பாதைக்கான வரைப்படம் ஆகியவற்றையும் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
கண்காட்சியின் சின்னத்தில் சென்னாப்பட்டினத்தின் கலையை சித்தரிக்கும் வகையில் மரத்தினால் வடிவமைக்கப்பட்ட நடனமாடும் சிறுமி உருவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1924585
AP/ES/RS/KRS
******