சர்வதேச அமைதிக்கான கார்னே அமைப்பின் தலைவர் திரு.வில்லியம் பர்ன்ஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழு இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.
அப்போது, கார்னே அமைப்பின் கிளையை இந்தியாவில் அமைப்பதற்கான முயற்சியை பிரதமர் மோடி வரவேற்றார். இந்த முயற்சியானது, பாரம்பரிய ஜனநாயகத்தையும், நாட்டில் வழங்கப்பட்டுள்ள எண்ண சுதந்திரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், இந்த மையமானது இந்தியாவில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் கலைத்துறையில் சுதந்திரமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் சூழலை உருவாக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். இதுதவிர, இந்தியா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் இடையேயான முக்கிய கூட்டாளித்துவத்தை வலுப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
Mr. William Burns, President @CarnegieEndow called on PM @narendramodi. pic.twitter.com/xBHZ20xgMo
— PMO India (@PMOIndia) April 5, 2016