Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்தார் வல்லபாய் படேல் உயிரியல் பூங்காவை தொடங்கி வைத்தார் பிரதமர்

சர்தார் வல்லபாய் படேல் உயிரியல் பூங்காவை தொடங்கி வைத்தார் பிரதமர்


குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில், சர்தார் படேல் தேசிய உயிரியல் பூங்கா, பிரம்மாண்ட பறவை கூண்டு ஆகியவற்றை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கெவாடியா ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் 17 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் மற்றும் 4 புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.  புதிய படகு வழித்தடம், புதிய கோரா பாலம், கருடேஸ்வர் அணை, அரசு குடியிருப்புகள், பேருந்து நிறுத்தம், ஒற்றுமை நர்சரி, கல்வானி சுற்றுச்சூழல் சுற்றுலா, பழங்குடியின விடுதி போன்ற திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். ஒற்றுமை படகு சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

வனப் பயணம் மற்றும் பிரம்மாண்ட பறவைகள் கூண்டு:

சர்தார் வல்லபாய் படேல் உயிரியல் பூங்காவில் உள்ள பிரம்மாண்ட பறவைகள் கூண்டு பற்றி பிரதமர் கூறுகையில், ‘‘ இந்த உயரமான பறவைகள் கூண்டு, பறவைகளை ரசிப்பர்களுக்கு மகிழ்ச்சி  அளிக்க கூடியதாக  இருக்கும். கெவாடியாவுக்கு வந்து, உயிரியல் பூங்காவில் உள்ள இந்த பறவைகள் கூண்டை பாருங்கள். இது மிகச் சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும்’’ என்றார்.

மிக நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள  உயிரியல் பூங்கா, 375 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. 29 மீட்டர் முதல் 180 மீட்டர் உயரம் வரை 7 விதமான இடங்கள் இங்கு உள்ளன. இங்கு 1100 பறவைகள், விலங்குகள் மற்றும் 5 லட்சம் தாவரங்கள் உள்ளன. இது மிகவும் விரைவாக உருவாக்கப்பட்ட உயிரியல் பூங்கா. இதில் இரண்டு விதமான பறவை கூண்டுகள் உள்ளன. ஒன்றில் உள்நாட்டு பறவைகளும், மற்றொன்றில் கவர்ச்சிகரமான பறவைகளும் உள்ளன.  இது பறவைகளுக்கான உலகின் மிகப் பெரிய கூண்டு. இதைச் சுற்றிலும் செல்ல பிராணிகளின் மண்டலம் உள்ளது. இங்குள்ள பஞ்சவர்ண கிளி, அழகு கிளிகள், முயல்கள், அழகு எலிகள் ஆகியவற்றை தொட்டு பார்த்து மகிழ்ச்சியடையலாம்.

ஒற்றுமை படகு சேவை:

ஒற்றுமை படகு  சவாரி மூலம் ஒருவர், ஷ்ரஸ்தா பாரத் பவனிலிருந்து, ஒற்றுமை சிலை அமைந்துள்ள பகுதியை  6 கி.மீ தூரத்துக்கு 40 நிமிடங்கள் சுற்றி பார்க்க முடியும். இதற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ள நவீன படகில் ஒரே நேரத்தில் 200 பேர் பயணம் செய்யலாம்.  இந்த படகு சேவை செயல்பாட்டுக்காக புதிய கோரா பாலம் கட்டப்பட்டுள்ளது. ஒற்றுமை சிலையை, சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காகவே, படகு வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது.

—–