Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்தார் படேலின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் அவரை நினைவு கூர்ந்துள்ளார்


சர்தார் படேலின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். சர்தார் படேல், தனது அசைக்க முடியாத உத்வேகம், தொலைநோக்குப் பார்வை, அசாதாரண அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நமது தேசத்தின் இயங்குநிலையை வடிவமைத்தார் என்று திரு மோடி கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

சர்தார் படேலின் பிறந்தநாளில், அவரது அசைக்க முடியாத உத்வேகம், ராஜீய தொலைநோக்கு, நமது தேசத்தின் இயங்குநிலையை வடிவமைத்த அசாதாரண அர்ப்பணிப்பு ஆகியவற்றை நாம் நினைவில் கொள்கிறோம். தேசிய ஒருமைப்பாட்டுக்கான அவரது அர்ப்பணிப்பு, தொடர்ந்து நம்மை வழிநடத்துகிறது. அவரது சேவைக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.”

 

*****

ANU/SMB/BR/KPG