இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாள் நாளை (அக்டோபர் 31ந் தேதி) நாடுமுழுவதும் தேசிய ஒருமைப்பாடு தினமாக கொண்டாடப்படவுள்ளது.
காலை 7.30 மணி அளவில் புது தில்லி நாடாளுமன்ற வீதியில் உள்ள சர்தார் படேல் உருவ சிலைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மலர் அஞ்சலி செலுத்துவார்.
அதன் பிறகு ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பங்கு பெறுவதற்காக ராஜ்பத்தில் ஒன்று கூடும் மக்களிடம் பிரதமர் உரையாற்றுவார். அங்கு மக்களுடன் இணைந்து உறுதிமொழி ஏற்பார்
சர்தார் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு காலை 8.15 அளவில் விஜய் சவுக் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒற்றுமைக்கான ஓட்டத்தை பிரதமர் கொடி அசைத்து துவக்கிவைப்பார். இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பு முழுக்க முழுக்க தன்னார்வத்தின் அடிப்படையானது. அதிக அளவிலான பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஒருமைப்பாடு தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி இன்று பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த கொண்டாட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நடக்கும் இந்த விழாவில் மத்திய அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்
சப்-
Tomorrow, on Rashtriya Ekta Diwas, India will run for unity! https://t.co/bVvF4qsuks
— Narendra Modi (@narendramodi) October 30, 2015