Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தேசிய அமர்வை (ஜிஎஸ்டிஏடி) உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தேசிய அமர்வை (ஜிஎஸ்டிஏடி) உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது.

மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தேசிய பெஞ்ச் புதுதில்லியில் அமைக்கப்படும். இதற்கு அதன் தலைவர் தலைமை தாங்குவார். மத்திய அரசிலிருந்து ஒரு தொழில்நுட்ப உறுப்பினரும், மாநில அரசிலிருந்து ஒரு தொழில்நுட்ப உறுப்பினரும் இதில் இடம்பெற்றிருப்பார்கள்.

இதனை உருவாக்க தொடரா (ஒருமுறை) செலவினம் ரூ.92.50 லட்சமாக இருக்கும். தொடர் செலவினம் ஆண்டுக்கு ரூ.6.86 கோடியாக இருக்கும்.