Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சமீபத்திய மனதின் குரல் நிகழ்வில் உடல் பருமனுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்


உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை விகிதம் அதிகரித்து வருவதை முறியடிப்பதன் அவசரத் தேவை பற்றி எடுத்துரைத்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது பற்றி அறிவுறுத்த பிரமுகர்களை அவர் பரிந்துரைத்துள்ளார். இந்த இயக்கத்தை மேலும் விரிவுபடுத்த அவர்கள் மேலும் 10 பேரை பரிந்துரைக்கவும் வலியுறுத்தி உள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது;

“நேற்றைய #மனதின் குரல் நிகழ்வில் கூறியிருப்பது போல், உடல் பருமனை எதிர்க்கும் போராட்டத்தை வலுப்படுத்தவும், உணவில் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது பற்றி விழிப்புணர்வை பரவலாக்கவும் கீழ்க்காணும் 10 பேரை நியமிக்க நான் விரும்புகிறேன். இவர்கள் ஒவ்வொருவரும் 10 பேரை நியமிக்கவும் நான் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் நமது இயக்கம் மேலும் பெரிதாகும்!

@anandmahindra

@nirahua1

@realmanubhaker

@mirabai_chanu

@Mohanlal

@NandanNilekani

@OmarAbdullah

@ActorMadhavan

@shreyaghoshal

@SmtSudhaMurty

கூட்டாக இணைந்து இந்தியாவை உடல் தகுதியோடும், ஆரோக்கியமாகவும் நாம் மாற்றுவோம். #FightObesity”

***

(Release ID: 2105690)
TS/SMB/RR/KR