Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சந்திரயான்-2 செலுத்தப்பட்டது குறித்து பிரதமர் அறிக்கை


சந்திரயான்-2 செலுத்தப்பட்டது குறித்த பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அறிக்கை வருமாறு:

“நமது பெருமைமிகு வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய சிறப்புமிக்க தருணம் இது! சந்திரயான்-2 செலுத்தப்பட்டிருப்பது, நமது விஞ்ஞானிகளின் செயல்திறன் மற்றும் அறிவியல் துறையில் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்ற 130 கோடி இந்திய மக்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியர் ஒவ்வொருவரும் இன்று மிகுந்த பெருமிதம் அடைந்துள்ளனர்!

மனதால் இந்தியர், உணர்வால் இந்தியர்! சந்திரயான்-2 முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது என்பது ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சந்திரனை ஆராய்வதற்கான ஆர்பிட்டர் மற்றும் சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கான லேண்டர் – ரோவர் கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

இதற்குமுன் அனுப்பப்பட்ட எந்தவொரு விண்கலமும், சந்திரனின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்யாத நிலையில், சந்திரயான்-2 அங்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவிருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். சந்திரனைப் பற்றிய புதிய தகவல்களைப் பெறுவதற்கு இந்த விண்கலம் உதவிகரமாக இருக்கும்.

சந்திரயான்-2 விண்கலம் தயாரிப்பு போன்ற முயற்சிகள், நமது அறிவார்ந்த இளைஞர்களை அறிவியல் துறைக்கு ஈர்க்கவும், உயர்தர ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் மேற்கொள்வதையும் மேலும் ஊக்குவிப்பதாக அமையும். சந்திரயான்-2 அனுப்பப்பட்டிருப்பது, சந்திரனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் திட்டங்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பதாக அமையும். சந்திரனைப் பற்றிய நமது அறிவாற்றல் கணிசமாக மேம்படும்.”

நமது பெருமைமிகு வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய சிறப்புமிக்க தருணம் இது!

#சந்திரயான்-2 செலுத்தப்பட்டிருப்பது, நமது விஞ்ஞானிகளின் செயல்திறன் மற்றும் அறிவியல் துறையில் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்ற 130 கோடி இந்திய மக்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியர் ஒவ்வொருவரும் இன்று மிகுந்த பெருமிதம் அடைந்துள்ளனர்!

-நரேந்திர மோடி (@narendramodi) ஜுலை 22, 2019.

மனதால் இந்தியர், உணர்வால் இந்தியர்!

#சந்திரயான்-2 முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது என்பது ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சந்திரனை ஆராய்வதற்கான ஆர்பிட்டர் மற்றும் சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கான லேண்டர் – ரோவர் கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

-நரேந்திர மோடி (@narendramodi) ஜுலை 22, 2019.

இதற்குமுன் அனுப்பப்பட்ட எந்தவொரு விண்கலமும், சந்திரனின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்யாத நிலையில், #சந்திரயான்-2 அங்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவிருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

சந்திரனைப் பற்றிய புதிய தகவல்களைப் பெறுவதற்கு இந்த விண்கலம் உதவிகரமாக இருக்கும்.

-நரேந்திர மோடி (@narendramodi) ஜுலை 22, 2019.

#சந்திரயான்-2 விண்கலம் தயாரிப்பு போன்ற முயற்சிகள், நமது அறிவார்ந்த இளைஞர்களை, அறிவியல் துறைக்கு ஈர்க்கவும், உயர்தர ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் மேற்கொள்வதையும் மேலும் ஊக்குவிப்பதாக அமையும்.

சந்திரயான்-2 அனுப்பப்பட்டிருப்பது, சந்திரனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் திட்டங்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பதாக அமையும். சந்திரனைப் பற்றிய நமது அறிவாற்றல் கணிசமாக மேம்படும்.”

-நரேந்திர மோடி (@narendramodi) ஜுலை 22, 2019.

விகீ/எம்எம்/கந்