Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“சந்திரசேகர் – சித்தாந்த அரசியலின் கடைசி பிம்பம்” என்ற நூலை பிரதமர் வெளியிடுகிறார்.


சந்திரசேகர் – சிந்தாந்த அரசியலின் கடைசி பிம்பம் என்ற நூலை, பிரதமர் நரேந்திர மோடி, இன்று (24.07.2019) வெளியிட்டார்.  இந்த நூலை மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ், திரு. ரவி தத் பாஜ்பாய் ஆகியோர் எழுதியுள்ளனர்.  புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி, நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் அமைந்துள்ள பாலயோகி அரங்கத்தில் நடைபெற்றது.

PM India

PM India

நூலின் முதல் பிரதியை பிரதமர் திரு நரேந்திர மோடி குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடுவிடம், வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தற்போதைய அரசியல் நிலைமையில் திரு சந்திரசேகர் மறைந்து சுமார் 12 ஆண்டுகளுக்கும் பிறகு முன்னாள் பிரதமரின் எண்ணங்கள் நமக்கு தொடர்ந்து வழிகாட்டுவதாகவும், துடிப்பை அளிப்பதாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார். 

PM India

நூலை எழுதிய திரு ஹரிவன்ஷைப் பாராட்டிய பிரதமர், திரு சந்திரசேகருடன் தமக்கு இருந்த தொடர்பையும், கலந்துரையாடிய சில நினைவுகளையும், பகிர்ந்து கொண்டார்.

திரு சந்திரசேகரை கடந்த 1977-ல் தாம் முதலில் சந்தித்துப் பேசியதை அவர் நினைவு கூர்ந்தார். முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் திரு பைரோன் சிங் ஷெகாவத்துடன் அப்போது அவர் பயணம் மேற்கொண்டிருந்ததாகவும், தில்லி விமான நிலையத்தில் திரு சந்திரசேகரை தாம் சந்தித்ததாகவும் பிரதமர் கூறினார். மாறுபட்ட அரசியல் சித்தாந்தங்களைக் கொண்டிருந்தாலும்,  இருதலைவர்களும்  அன்பின் பிணைப்பைப் பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

திரு.அடல் பிகாரி வாஜ்பாயை, திரு சந்திரசேகர் “குருஜி” என்று அழைத்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். சிறப்பு மிகுந்த கலாச்சாரம் மற்றும் கொள்கைகளின் உருவமாக திரு சந்திரசேகர் திகழ்ந்தார் என்று அவர் பாராட்டினார். அவரது காலத்தில் அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சியில் அவருக்கு பிடிக்காத சில அம்சங்களை எதிர்ப்பதற்கு திரு சந்திரசேகர் தயங்கியதில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

அரசியல் தலைவர்களான திரு மோகன் தாரியா மற்றும் திரு. ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகிய இருவரும் திரு சந்திரசேகர் குறித்து மிகவும் உயர்வாக  கருத்துக்களைத்  தெரிவித்திருந்ததாகவும் பிரதமர் எடுத்துரைத்தார். திரு சந்திரசேகரை  தாம் கடைசியாக சந்தித்துப் பேசியதை திரு.நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.  நோய்வாய்ப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் தம்முடன் தொலைபேசியில் பேசியதாகவும், தில்லியில் இருக்கும் போது தம்மை வந்து சந்திக்குமாறு அவர் அழைப்பு விடுத்தாகவும் தெரிவித்தார். இந்த உரையாடலின்போது குஜராத் முன்னேற்றம் குறித்து திரு சந்திரசேகர் தம்மிடம் விசாரித்ததாகவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து தம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டதாகவும் பிரதமர் கூறினார்.

திரு சந்திரசேகரின்  தெளிவான எண்ணம் மக்களுக்காக கடமையாற்றும் பொறுப்பு, ஜனநாயகக் கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை பிரதமர் வெகுவாகப் புகழ்ந்தார். 

ஏழை, எளிய  விவசாயிகளின் மேம்பாட்டுக்காக  திரு சந்திரசேகர் மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாதயாத்திரையை பிரதமர் நினைவு கூர்ந்தார். தகுதி வாய்ந்த அவருக்கு நாம் உரிய மரியாதையை வழங்க தவறியது துரதிருஷ்டவசமானது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் சில பெரிய தலைவர்களான டாக்டர் அம்பேத்கர் மற்றும் சர்தார் படேல் உள்ளிட்டோர் குறித்து மக்களின் ஒரு பிரிவினர் எதிர்மறையான கருத்துக்களைத்  தெரிவித்து வந்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார். நாட்டின் முன்னாள் பிரதமர்கள் அனைவருக்கும் தில்லியில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.  முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தினர், அவர்களது வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியல் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய அம்சங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார். அரசியல் தீண்டாமைக்கும் அப்பாற்பட்டு ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் நாட்டுக்குத் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, மாநிலங்களவைத் துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் திரு குலாம் நபி ஆசாத் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்று உரையாற்றினர்.

*****