Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப உணர்வுபூர்வமாக செயல்படுங்கள்:

சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப உணர்வுபூர்வமாக செயல்படுங்கள்:

சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப உணர்வுபூர்வமாக செயல்படுங்கள்:


சூழலுக்கு ஏற்ப உணர்வுபூர்வமாக செயல்படுங்கள்நடக்கவும்” என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இளைய இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டார்.

2014 -ம் ஆண்டின் இந்திய ஆட்சி பணி தொகுப்பு அலுவலர்கள் உதவி செயலாளர்களாக பணியை தொடங்கும் துவக்க விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியதாவது:

உங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியின்போது நீங்கள் பயின்றதை விட, உங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் உங்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். அடுத்த மூன்று மாதங்களுக்கு உங்களின் திறமைக்கு கூடுதல் வளம் சேர்ப்பதுடன் நீங்கள்

இணைக்கப்பட்டுள்ள துறைக்கும் கூடுதல் வளம் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். அரசு முறையில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் குறித்து பேசிய பிரதமர், அரசு செயல்பாடுகளின் தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டார்.

பதவி/அதிகாரத்தினால் வியப்படைய வேண்டாம். அடுத்த மூன்று மாதங்களுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளை உதவி செயலராக பணிபுரிய உள்ள நீங்கள், உங்களின் மேல்

அதிகாரிகளிடம் கலந்துரையாடும் போது தைரியமாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். 2013-ம் ஆண்டு பிரிவிலிருந்து தங்களின் பணி துவங்கிய போதே மத்திய அரசுடன் பணிபுரிய வாய்ப்பை உறுதி செய்துள்ளதை எடுத்துரைத்த பிரதமர், இந்த வாய்ப்பு உங்கள் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை என்று கூறினார்.

மத்திய வளர்ச்சி (தனி பொறுப்பு), பணியாளர் நலன், பொது மக்கள் குறைபாடுகள் மற்றும் ஓய்வுதியம் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

***