இந்திய தாய்க்கு வெற்றி !
வீரத்திற்கு அடையாளமாக விளங்கும் சத்தீஸ்கர் மஹ்தரியில் உள்ள கோராவின் மதிப்புமிக்க மாணிக்கம், பிலாய் உருக்காலை ஆகும். புகழ்பெற்ற சத்தீஸ்கர் மாநில முதல்வரும் எனது பழைய சகாவான டாக்டர்.இராமன் சிங் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாவான திரு.சவுத்ரி பீரேந்தர் சிங் அவர்களே, மண்ணின் மைந்தர் அமைச்சர் திரு.மனோஜ் சின்கா அவர்களே, மத்தியில் எனது சகாவான திரு.விஷ்ணு தேவ் அகர்வால் அவர்களே, மாநில அரசின் அமைச்சர்களே மற்றும் எனதருமை சத்தீஸ்கரின் சகோதர, சகோதரிகளே,
உங்களது ஆசிகளை பெறுவதற்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இன்று போலவே, அதுவும் மாதத்தின் 14-ம் நாள். இரண்டு மாதங்களுக்கு முன்பாக, ஏப்ரல் 14 அன்று, ஆயுஷ்மான் பாரத் இயக்கத்தின் முதல் கட்டத்தை இம்மண்ணிலிருந்து நான் துவக்கி வைத்தேன்.
சத்தீஸ்கரின் எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், அதன் வரலாற்றில், மற்றொரு பொற் சகாப்தம் இன்று கூட்டப்பட்டுள்ளது. சில காலத்திற்கு முன்பாக, பிலாய் உருக்காலையின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணி, ஜக்தல்பூரில் இரண்டாவது விமான நிலையம், ராய்பூரில் புதிய கட்டளை அறை துவக்கம் மற்றும் பல்வேறு இதர வளர்ச்சிப் பணிகள் துவங்கப்பட்டன. இது தவிர, பிலாயில், இந்திய தொழில்நுட்ப நிறுவன வளாக மேம்பாடு, மாநிலத்தில் பாரத் நெட்டின் 2வது கட்டம் ஆகியவையும் துவக்கி வைக்கப்பட்டன.
எனதருமை சத்தீஸ்கரின் சகோதர, சகோதரிகளுக்கு ரூ22 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான இத்திட்டங்களை அர்ப்பணிக்க நான் விரும்புகிறேன். இத்திட்டங்கள் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்கான புதிய வாய்புக்களை ஏற்படுத்தும். இது சத்தீஸ்கரின் தொலைதூரப் பகுதிகளை நவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வசதி மூலம் இணைக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு, பஸ்தர் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் வன்முறையுடன் தொடர்புக் கொண்டிருந்தது. இன்று, பஸ்தர் ஜக்தல்பூர் விமான நிலையத்தால் அறியப்படுகிறது.
நண்பர்களே,
திரு அடல் பிகாரி வாஜ்பேயி அவர்கள் உருவாக்கிய தொலை நோக்குப் பார்வையான இப்பகுதியின் துரித வளர்ச்சியையும் மற்றும் சத்தீஸ்கர் மக்களின் தளராத முயற்சியையும் காண்பது மிகுந்த மகிழ்ச்சியையும், உணர்வுமிக்க அனுபவத்தையும் நமக்கு அளிக்கிறது.
எனது நண்பர், முதல்வர் திரு.இராமன் சிங் அவர்கள் அடல் அவர்களின் பார்வையை முன்னெடுத்து செல்கிறார். நாங்கள் அவ்வப்போது நேரில் சந்திப்போம் அல்லது தொலைபேசி மூலம் உரையாடுவோம். ஒவ்வொரு முறையும், அவர் புதிய நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன், புதிய உத்தி அல்லது புதிய திட்டத்துடன் வருவார். அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மிக உறுதியுடன் இருப்பார்.
நண்பர்களே,
சட்டம், அமைதி மற்றும் வாழ்விற்கான அடிப்படை வசதிகள் ஆகியவை வளர்ச்சிக்கு முதன்மையானது என்பதை நாம் அறிவோம். திரு.இராமன் சிங் அவர்கள், ஒரு புறம் அமைதி, நிலைத்தன்மை, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவைக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், மற்றொரு புறம் வளர்ச்சியின் புதிய உச்சங்களை தொடுவதற்கான புதிய உத்திகள் மற்றும் திட்டங்கள் மூலம் சத்தீஸ்கரை முன்னெடுத்து செல்வார். வளர்ச்சியின் இப்பயணத்திற்காக திரு.இராமன் சிங் அவர்களையும், சத்தீஸ்கரின் எனதருமை சகோதர, சகோதரிகளை நான் பாராட்டுகிறேன்.
சகோதர, சகோதரிகளே,
இப்பகுதி எனக்கு புதிதல்ல. மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் பிரிவதற்கு முன்பாக, இந்த இடத்திற்கு இருசக்கர வாகனத்தின் மூலம் நான் வருகை தந்ததுண்டு. நான் நிறுவனப் பணிக்காக இங்கு வருவது வழக்கம். நாங்கள் சுமார் 50 பேர்கள் சந்தித்துக் கொள்வோம். தேசிய மற்றும் சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தின் சமூக பிரச்சினைகள் மற்றும் பிறவற்றை குறித்து நாங்கள் விவாதிப்போம். அந்நாள் முதல் சத்தீஸ்கருடன் எனக்கு நெருங்கிய தொடர்புண்டு. என் மீது நீங்கள் அதிகமான அன்பை பொழிந்துள்ளீர்கள். நாங்கள் உங்களுடன் எப்போதும் தொடர்பிலேயே இருக்கிறேன். கடந்த 20-25 ஆண்டுகளில், சத்தீஸ்கருக்கு வருகை தராத ஆண்டே இருந்ததில்லை. நான் வருகை தராத எந்த மாவட்டமும் விடுபட்டிருக்காது. இங்குள்ள மக்களிடமிருந்து நான் அதிகமான அன்பை பெற்றுள்ளேன்.
சகோதர, சகோதரிகளே,
நான் இங்கு வருவதற்கு முன்பாக, பிலாய் உருக்காலாய்க்கு சென்றிருந்தேன். ரூ 18 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பம் மற்றும் புதிய செயல்திறன்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. அதிர்ஷடவசமாக, நான் இன்று இந்த புதிய நவீன உருக்காலையை துவக்கி வைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளேன். சுதந்திரமடைந்த நாள் முதல், கட்ச் முதல் கட்டாக் வரையிலும் மற்றும் கார்கில் முதல் கன்னியாகுமரி வரையிலும் உள்ள அனைத்து சாலைகளும் இந்த மண்ணின் மக்களின் கடின உழைப்பினால் விளைந்தது என்ற உண்மையை வெகு சிலரே அறிந்திருப்பார்கள். பிலாய், இரும்பை மட்டும் உருவாக்கவில்லை, அது மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தியுள்ளது. நவீனமயமாக்கப்பட்ட பிலாய் உருக்காலை, இரும்பை போன்று புதிய இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்தும். உருக்காலைகளின் காரணமாக பிலாய் மற்றும் துர்க் முற்றிலும் முகம் மாறியுள்ளன என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். பஸ்தாரில் உள்ள உருக்காலை, அப்பகுதி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் என நான் நம்புகிறேன்.
சகோதர, சகோதரிகளே,
சத்தீஸ்கரின் வளர்ச்சியை துரிதப்படுவதில் இரும்பு தாது சுரங்கங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. நீங்கள், குறிப்பாக, பழங்குடியின சகோதர, சகோதரிகள் அதன் உரிமையை பெற்றுள்ளீர்கள். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பாக, நாங்கள் சட்டத்தில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்தோம். சுரங்கத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை உள்ளூர் மக்களின் வளர்ச்சிக்காக செலவழிக்க வேண்டும் என நாங்கள் முடிவெடுத்தோம். நாங்கள் இச்சட்டத்திற்கான மாதிரியை ஏற்கனவே உருவாக்கியுள்ளோம். எனவே, ஒவ்வொரு சுரங்க மாவட்டத்திலும் மாவட்ட சுரங்க அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது. அதனால், சத்தீஸ்கருக்கு ரூ.3000 கோடி கிடைத்தது. இத்தொகை தற்போது, மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
சகோதர, சகோதரிகளே,
இந்தியாவில் உருவாக்குவோம் வளர்ச்சிக்கு முக்கியமானது போன்றே திறன் மேம்பாடும் அவசியமாகும். பல்லாண்டுகளாக நாட்டின் மிகச் சிறந்த கல்விக்கான இடமாக பிலாய் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய வசதிகள் இருந்தும், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஏற்படுத்துவதன் தேவை உணரப்பட்டது. உங்கள் முதல்வர் திரு.இராமன் சிங் அவர்கள் பிலாயில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை ஏற்படுத்திட, கடந்த ஆட்சிக்காலத்தின்போதே கடுமையாக முயற்சித்தார். இருப்பினும், அப்போது அரசாங்கத்தை இயக்கிய மக்களை குறித்து நீங்கள் நன்கு அறிவீர்கள். எங்களது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், 5 புதிய இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை ஏற்படுத்துவது என உடனடியாக முடிவெடுத்தோம். பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் பிலாயில் ஏற்படுத்தப்பட்ட இந்திய தொழில்நுட்ப நிறுவனம் இன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.1100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இவ்வளாகம், சத்தீஸ்கர் மற்றும் நாட்டின் பிற பகுதியை சேர்ந்த சிறந்த மாணவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப கல்வியை அளிப்பதில் முக்கிய கவனம் செலுத்துவதுடன், புதிதாக சிலவற்றை செய்யவேண்டும் என்ற உணர்வை அவர்களுக்கு அளிக்கும்.
நண்பர்களே,
சில நிமிடங்களுக்கு முன்பாக, இந்த மேடையில் சில இளைஞர்களுக்கு மடிகணினியை வழங்கும் வாய்ப்பை நான் பெற்றேன். பாரதிய ஜனதா அரசு, தகவல் புரட்சித் திட்டம் மூலம் கணினி மற்றும் தொழில்நுட்ப கல்விக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. நாம் மக்களுக்கு தொழில்நுட்ப இணைப்பை அதிகரிக்க செய்வதன் மூலம், அதன் பயன்களை அதிகளவில் அவர்களுக்கு நாம் வழங்க இயலும். கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த கண்ணோட்டத்துடன் தான் டிஜிட்டல் இந்தியா முன்னெடுத்து செல்லப்படுகிறது. சத்தீஸ்கர் அரசு இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், உத்வேகத்துடன் அனைத்து குடியிருப்புகளுக்கும் கொண்டு செல்கிறது.
நண்பர்களே,
கடந்த முறை நான் பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இங்கு வருகை தந்தபோது, இணைய இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமான, பஸ்தார் நெட்டை துவக்கி வைக்கும் வாய்ப்பினை பெற்றேன். இன்று, பாரத் நெட் 2வது கட்டப் பணி துவங்கப்பட்டுள்ளது. ரூ.2500 கோடி மதிப்பிலான இத்திட்டம், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சத்தீஸ்கரில் உள்ள சுமார் 4000 ஊராட்சிகள் ஏற்கனவே இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 6000 ஊராட்சிகளும் அடுத்த ஆண்டிற்குள் இணைக்கப்படும்.
நண்பர்களே,
டிஜிட்டல் இந்தியா இயக்கம், பாரத் நெட் திட்டம், மாநில அரசின் தகவல் புரட்சித் திட்டம், 50 லட்சம் ஸ்மார்ட் போன்கள் வழங்குதல் மற்றும் 1200க்கும் அதிகமான கைபேசி கோபுரங்கள் (மொபைல் டவர்கள்) நடுதல் போன்ற திட்டங்களின் மூலம் ஏழை, பழங்குடியின, ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான புதிய அடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் இணைப்பு, வெறும் இடங்களை மட்டும் இணைக்கவில்லை, மக்களையும் இணைக்கிறது.
சகோதர, சகோதரிகளே,
இன்று, நாட்டை நீர், நிலம் மற்றும் பிறவற்றின் மூலம் இணைப்பதற்கு அதிகளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் விளைவாக, குறிப்பிட்ட பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கே முந்தைய அரசுகள் தயங்கிய போது, சாலைகளுடன் விமான நிலையத்தையும் நாங்கள் கட்டியுள்ளோம். சாதாரண மக்களும் விமானத்தில் பயணம் செய்வதை உறுதி செய்வதே எனது லட்சியமாகும் என நான் ஏற்கனவே உங்களிடம் கூறியுள்ளேன். ஆகையால், நாங்கள் உதான் திட்டத்தை துவக்கியதன் மூலம், நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டு வருகிறது. உங்கள் ஜக்தல்பூரிலும் அதே போன்ற விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ஜக்தல்பூரிலிருந்து ராய்பூருக்கு விமான போக்குவரத்து ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது. 6-7 மணி நேரம் பயணம் கொண்ட, ஜக்தல்பூர் மற்றும் ராய்பூருக்கு இடையேயான தூரத்தை தற்போது வெறும் 40 நிமிடங்களிலேயே அடையலாம்.
நண்பர்களே,
அரசின் கொள்கைகளின் காரணமாக, மக்கள் ரயிலில் குளிர்சாதன வகுப்புகளில் பயணிப்பதைவிட விமானத்தில் பயணிப்பதையே விரும்புகின்றனர். ஒரு காலத்தில், ராய்பூரில் ஒரு நாளில் வெறும் 6 விமானங்கள் மட்டுமே தரையிரங்கின. தற்போது, ஒரு நாளில் சுமார் 50 விமானங்கள் தரையிரங்குகின்றன. இப்புதிய வழித்தடங்கள் தலைநகரிலிருந்து உள்ள தூரத்தை மட்டும் குறைக்கவில்லை, சுற்றுலா, வணிகம் மற்றும் வியாபாரம் மற்றும் வேலைவாய்ப்புக்களை ஊக்குவித்துள்ளன.
நண்பர்களே,
இன்று சத்தீஸ்கர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. புதிய ராய்பூர் நகரம் நாட்டின் முதல் பசுமை ஸ்மார்ட் நகரமாக உருவாகியுள்ளது. இத்தருணத்தில், நான் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை துவக்கி வைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன். தற்போது, இம்மையத்திலிருந்தே முழு நகரத்தின் தண்ணீர், மின்சாரம், தெருவிளக்குகள், கழிவுநீர் மற்றும் போக்குவரத்தை கண்காணிக்க முடியும். இவை நவீன தொழில்நுட்பம் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. புதிய ராய்பூர், நாட்டில் உள்ள பிற ஸ்மார்ட் நகரங்களுக்கு உதாரணமாகத் திகழும்.
முன்பு பின்தங்கிய மற்றும் பழங்குடியின சமூகங்கள் மற்றும் அதன் காடுகளுக்காக அறியப்பட்ட சத்தீஸ்கர், ஸ்மார்ட் நகரம் என்ற புதிய அடையாளத்தை பெற்றுள்ளது. இது பெருமைக்குரிய விஷயமாகும்!
நண்பர்களே,
எங்களது ஒவ்வொரு திட்டமும், நாட்டு மக்களுக்கு மரியாதையும், பாதுகாப்பான வாழ்வையும் அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளை உடையது. எனவே தான், சாதனையளவில் இளைஞர்கள் முக்கிய நீரோட்டத்தில் இணைந்து, அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் சத்தீஸ்கருடன் நாட்டின் பல்வேறு பகுதிகளும் வளர்ச்சியடைவதற்கு பங்கு கொண்டுள்ளதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
வன்முறைக்கு, வளர்ச்சி, வளர்ச்சி மற்றும் வளர்ச்சி என்ற ஒரே ஒரு பதில் தான் உள்ளது என நம்புகிறேன். வளர்ச்சியின் மூலம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல் என்பது, எத்தகைய வன்முறையையும் அழித்துவிடும். மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு மற்றும் சத்தீஸ்கரில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு ஆகியவை வளர்ச்சியின் மூலம் நம்பிக்கையான சூழ்நிலையை உருவாக்கிட முயற்சித்து வருகின்றன.
சகோதர, சகோதரிகளே,
கடந்த முறை நான் சத்தீஸ்கருக்கு வருகை தந்த போது, நாடு முழுவதும் கிராம ஸ்வராஜ் திட்டம் துவங்கப்பட்டது. கடந்த இரண்டு மாதத்தில், இந்த இயக்கத்தால் நேர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இயக்கம், குறிப்பாக, சுதந்திரம் அடைந்தது முதல், வளர்ச்சியில் 115 பின்தங்கியுள்ளன. இதில் சதீஸ்கரின் 12 மாவட்டங்களும் அடங்கியுள்ளன. வளர்ச்சியின் பல்வேறு பரிமாணங்களை கருத்தில் கொண்டு புதிய சக்தியுடன் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது, கிராமங்களில் உள்ள ஒவ்வொருவரும் வங்கிக் கணக்குகள், எரிவாயு இணைப்பு, மின்சார இணைப்பு, எல்.இ.டி. பல்புகள் கொண்டிருப்பதுடன், ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டிருப்பதையும், காப்பீடு செய்துள்ளதையும் உறுதி செய்கிறது.
கிராம ஸ்வராஜ் திட்டம், மக்கள் பங்கேற்பதற்கான உயர்ந்த சாதனமாக மாறியுள்ளது. இப்பிரச்சாரம் சத்தீஸ்கரின் வளர்ச்சியில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும். இத்தகைய நம்பிக்கையான சூழலில், ஏழைகள் மற்றும் பழங்குடியின சமூகங்கள் எவ்வாறு அதிகாரம் பெறுகின்றனர் என்பதை உங்களால் கற்பனையில் கூட காண இயலாது.
சத்தீஸ்கரில், ஜன் தன் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 30 லட்சம் ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இது வெறும் சத்தீஸ்கரின் புள்ளிவிபரம் மட்டுமே, ஒட்டுமொத்த நாட்டிற்கானது அல்ல. 37 லட்சத்திற்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டியது, 22 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் அளித்தது, முத்ரா திட்டத்தின் கீழ் 26 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு எந்தவித உறுதியும் இல்லாமல் கடன் அளித்தது, நாளொன்றுக்கு 90 பைசா மற்றும் மாதம் 1 ரூபாய் என்ற கட்டண விகிதத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு காப்பீடு அளித்ததுடன் 13 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மூலமாக பயன்கள் அளித்தது போன்றவற்றின் மூலம் சத்தீஸ்கர் மண்ணில் வளர்ச்சிக்கான புதிய சகாப்தம் எழுதப்பட்டுள்ளது.
சகோதர, சகோதரிகளே,
மின் இணப்பு வசதியில்லாமல் 7 லட்சம் குடும்பங்கள் சத்தீஸ்கரில் இருந்தன. பிரதம மந்திரி சவுபாக்யா திட்டத்தின் கீழ், சத்தீஸ்கரின் சரிபாதியளவிலான குடும்பங்கள், அதாவது, சுமார் 3.5 லட்சம் குடும்பங்களுக்கு ஒரு ஆண்டிற்குள்ளாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. சுதந்திரம் அடைந்தது முதல், மின் இணைப்பே இல்லாத ஏறக்குறைய 1100 கிராமங்கள் தற்போது மின் இணைப்பை பெற்றுள்ளன. இந்த ஒளி ஒவ்வொரு குடும்பத்திலும் வளர்ச்சி மற்றும் நம்பிக்கையை ஒளி வீசச் செய்யும்.
நண்பர்களே,
எங்களது அரசு வீடற்ற ஒவ்வொரு நபருக்கும் வீடு வழங்கிட பணியாற்றி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், ஒரு கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன. பிரதம மந்திரி வீடு திட்டத்தின் கீழ், முந்தைய அரசுகளின் நிறைவு பெறாத வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சத்தீஸ்கரில், சுமார் 6 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள குறிப்பாக, நடுத்த வகுப்பினருக்கு முக்கிய அறிவிப்பினை வெளியிட நான் விரும்புகிறேன், நடுத்தர வகுப்பினர் பயனடையும் வகையில் முக்கிய முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். முன்பு, நடுத்தர வகுப்பினருக்கு கட்டப்பட்டும் குடியிருப்புகளுக்கான வீடுகளுக்கான வட்டி விகிதங்கள் தளர்த்தப்பட்டன, ஆனால் பரப்பளவு குறைவாக இருந்தது. பரப்பளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.
சகோதர, சகோதரிகளே,
மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது என்பதை அறிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். இதன் பொருள், தற்போது அதிகளவிலான பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கான வட்டி விகிதங்களும் குறைக்கப்பட்டுள்ளன என்பதாகும். அரசின் இம்முடிவு, நடுத்தர வகுப்பினருக்கு பெருமளவில் பயனளிக்கும். இன்று, மத்திய அரசு மற்றும் மாநில அரசு திட்டங்களான பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டம், உஜ்வாலா திட்டம், முத்ரா திட்டம், ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் மற்றும் காப்பீட்டு திட்டப் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகள் வழங்கும் வாய்ப்பினை நான் பெற்றேன். இப்பயனாளிகளுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் அவர்களது எதிர்கால நல்வாழ்விற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.
நண்பர்களே,
இவை வெறும் திட்டங்கள் மட்டுமல்ல, ஏழை, பழங்குடியின மக்கள், மற்றும் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரின் தற்போதைய மற்றும் சிறப்பான எதிர்காலத்திற்கான தீர்மானமாகும். பழங்குடியின, பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வதற்கு எங்கள் அரசு சிறப்பு கவனத்தை செலுத்தி வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக, பீஜப்பூரிலிருந்து வன் தன் திட்டத்தை துவக்கி வைத்தேன். இதற்காக, வன் தன் விகாஸ் கேந்திராக்கள் திறக்கப்பட்டன. இதன் மூலம் சந்தையில் வனப் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
இந்த ஆண்டின் வரவு-செலவு திட்டத்தில் 22 ஆயிரம் ஊரகச் சந்தைகள் உருவாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன் முதல் கட்டமாக, 5000 சந்தைகள் அல்லது ஹாத்கள் உருவாக்கப்பட்டன. எனது பழங்குடியின சகோதர, சகோதரிகள் 5-6 கி.மீ.க்குள்ளாகவே அவர்கள் வசதிகளை பெற தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் எந்த சந்தையுடன் அவர்கள் தொடர்புக் கொள்வதற்கான முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.
இது தவிர, பழங்குடியின மக்களின் நல்வாழ்வினை கருத்தில் கொண்டு, வன உரிமைகள் சட்டம் மேலும் கடுமையான வகையில் செயல்படுத்தப்படும். கடந்த நான்கு ஆண்டுகளில், சுமார் ஒரு லட்சம் மலைவாழ் மக்கள் மற்றும் மலைவாழ் குழுவினர்களுக்கு 20 லட்சம் ஏக்கர்களுக்கான நில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
மூங்கில் தொடர்பாக அரசு சட்டத்தை திருத்தியுள்ளது. உங்களது விவசாய நிலங்களில் வளர்ந்த மூங்கில்களை நீங்கள் எளிதாக விற்பனை செய்யலாம். இச்சட்டம், வனங்களில் வசிப்பவர்கள் தங்கள் வருவாயை அதிகரிப்பதற்கான புதிய வழியை அளித்துள்ளது.
சகோதர, சகோதரிகளே,
பழங்குடியின சமூகத்தினரின் கல்வி மற்றும் சுயமரியாதையை கருத்தில் கொண்டு இந்த அரசு பணியாற்றி வருகிறது. பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக நாடு முழுவதும் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு வட்டாரத்திலும், ஒட்டுமொத்த மக்கள் தொகையில், 50% அதிகமாக பழங்குடியின சகோதர, சகோதரிகள் இருக்கும்பட்சத்தில் அல்லது இத்தகையவர்கள் 20 ஆயிரம் மக்கள் வசிக்கும்பட்சத்தில், ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.
இது தவிர, நாடு விடுதலை பெறுவதற்காக 1857 முதல் பழங்குடியின மக்களின் பங்கை மக்கள் அறிந்திடும் வகையில் புதிய பிரச்சார இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. மிகச் சிறந்த பழங்குடியின சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக பல்வேறு மாநிலங்களிலும் கண்காட்சியகங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்கள் சத்தீஸ்கரின் பொருளாதார மற்றும் சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்தவதுடன், பஸ்தார் முதல் சர்குஜா வரையிலும் மற்றும் ராய்கர் முதல் ராஜ்நாந்த் கிராமம் வரையிலும் ஒரே மாதிரியான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை கொண்டு வரும். இப்பிரச்சாரம், மாநிலத்தில் பிராந்தியங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்கு கொண்டு வருவதுடன், மிக விரைவாக நிறைவேற்றப்படும்.
இன்று நான் பிலாய் உருக்காலைக்கு செல்லும்போது, சத்தீஸ்கர் மக்கள் என்னை வரவேற்று, கவுரவித்ததை கண்டு நான் பேச்சற்றுபோனேன். நாட்டின் ஒட்டு மொத்தமும் சத்தீஸ்கர் தெருக்களில் நிறைந்துள்ளது போன்று காணப்பட்டது. நாட்டின் எந்தப் பகுதியும் தனது ஆசியை வழங்காமல் இருந்ததில்லை. அது ஒரு சிறு இந்தியா போன்றிருந்தது. நாட்டின் ஒற்றுமையை என் முன் வெளிகாட்டியதற்காகவும், அவரவர்கள் மாநிலங்களின் பாரம்பரியப்படி தங்களது ஆசிகளை வழங்கியதற்காகவும் நாடு முழுவதிலிமிருந்து பிலாய் மற்றும் துர்க்கில் குடியேறிய மக்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளனவாக இருப்பேன். சத்தீஸ்கருக்கு எப்போது நான் வந்தாலும், சில புதிய ஆக்கபூர்வமான பணி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு முறையும், சத்தீஸ்கர் தனக்கு தானே புதிய இலக்கை நிர்ணயித்துக் கொள்கிறது. அதனால், வளர்ச்சி துரித வேகத்தில் நடைபெறுகிறது.
சகோதர, சகோதரிகளே,
புதிய சத்தீஸ்கர், 2022-ல் புதிய இந்தியாவிற்கான வழியை வகுக்கும் என நான் நம்புகிறேன். உங்களது ஆசிகளுடன், புதிய இந்தியாவிற்கான தீர்மானம் உறுதியாக நிறைவேற்றப்படும் என நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன், நான் உங்களையும், சத்தீஸ்கர் அரசையும் பாராட்டுகிறேன். நான் எனது உரையை இந்தளவில் நிறைவு செய்கிறேன்.
மிக்க நன்றி!
******
भिलाई में स्टील प्लांट के विस्तार, जगदलपुर हवाई अड्डा और नया रायपुर के कमांड सेंटर का लोकार्पण किया गया। भिलाई में IIT कैंपस के निर्माण और राज्य में BharatNet phase 2 पर काम शुरु हो गया है। करीब-करीब 22,000 करोड़ रुपए से ज्यादा की योजनाओं का उपहार आज छत्तीसगढ़ को मिला है: PM
— PMO India (@PMOIndia) June 14, 2018
जिस राज्य के निर्माण के पीछे हमारे श्रद्धेय अटल जी का विजन है, आप सभी की कड़ी तपस्या है, उस राज्य को तेज़ गति से आगे बढ़ते देखना हमेशा मेरे लिए बहुत सुखद अनुभव होता है।
— PMO India (@PMOIndia) June 14, 2018
अटल जी के विजन को आपके लोकप्रिय मुख्यमंत्री रमन सिंह जी, पूरे परिश्रम के साथ आगे बढ़ा रहे हैं: PM
भिलाई ने सिर्फ स्टील ही नहीं बनाया बल्कि जिंदगियां, समाज और देश भी बनाया है। भिलाई का ये आधुनिक और परिवर्तित स्टील प्लांट अब न्यू इंडिया की बुनियाद को भी स्टील जैसा मजबूत करने का काम करेगा। आपने खुद अनुभव किया है कि कैसे स्टील प्लांट लगने के बाद यहां की तस्वीर ही बदल गई: PM
— PMO India (@PMOIndia) June 14, 2018
हमने ये सुनिश्चित किया कि जो भी खनिज निकलेगा उससे होने वाली कमाई का एक हिस्सा स्थानीय निवासियों पर खर्च करना आवश्यक होगा। इसके बाद छत्तीसगढ़ को भी 3 हजार करोड़ रुपए से ज्यादा की अतिरिक्त राशि मिली है। ये खर्च हो रहे हैं अस्पताल, स्कूल, सड़कें, शौचालय बनाने में: PM
— PMO India (@PMOIndia) June 14, 2018
आज IIT भिलाई के अपने कैंपस का शिलान्यास किया गया है। लगभग Rs 1,100 करोड़ की लागत से बनने वाला ये IIT कैंपस छत्तीसगढ़ और देश के मेधावी छात्रों के लिए प्रोद्योगिकी और तकनीकी शिक्षा का तीर्थ बनेगा, उन्हें कुछ नया करने के लिए हमेशा प्रेरित करता रहेगा: PM
— PMO India (@PMOIndia) June 14, 2018
देश को जल, थल, नभ हर प्रकार से जोड़ने का अभूतपूर्व प्रयास किया जा रहा है। पुरानी सरकारें जिन इलाकों में सड़कें तक बनाने से पीछे हट जाती थीं, वहां आज सड़कों के साथ ही हवाई अड्डे भी बन रहे हैं। हवाई चप्पल पहनने वाला हवाई जहाज में चल सके, इस सोच के साथ उड़ान योजना चलाई जा रही है:PM
— PMO India (@PMOIndia) June 14, 2018
आज जगदलपुर से रायपुर के लिए उड़ान भी शुरु हो गई है। अब जगलदपुर से रायपुर की दूसरी 6 से 7 घंटे की जगह सिर्फ 40 मिनट ही रह गई है।
— PMO India (@PMOIndia) June 14, 2018
सरकार की इन नीतियों का ही असर है कि अब ट्रेन में एसी डिब्बों में सफल करने वालों से ज्यादा यात्री हवाई जहाज में सफर करते हैं: PM
नया रायपुर शहर देश का पहला ग्रीनफील्ड स्मार्ट सिटी बन गया है। पानी, बिजली, स्ट्रीट लाइट, सीवेज, ट्रांसपोर्ट और पूरे शहर की निगरानी का काम सब इसी सेंटर से होगा। नया रायपुर अब देश के दूसरे Smart Cities के लिए भी एक मिसाल का काम करेगा: PM
— PMO India (@PMOIndia) June 14, 2018
मैं मानता हूं कि किसी भी तरह की हिंसा का, हर तरह की साजिश का, एक ही जवाब है- विकास। विकास से विकसित हुआ विश्वास, हर तरह की हिंसा को खत्म कर देता है: PM
— PMO India (@PMOIndia) June 14, 2018
पिछले दो महीनों में ग्राम स्वराज अभियान का बहुत सकारात्मक असर पड़ा है। ये अभियान विशेषकर देश के उन 115 आकांक्षी जिलों या Aspirational Districs में चलाया जा रहा है जो विकास की दौड़ में पीछे रह गए थे। इसमें छत्तीसगढ़ के भी 12 जिले शामिल हैं: PM
— PMO India (@PMOIndia) June 14, 2018
छत्तीसगढ़ में जनधन योजना के तहत 1 करोड़ 30 लाख से ज्यादा गरीबों के बैंक अकाउंट खुलने से, 37 लाख से ज्यादा शौचालयों के निर्माण से, 22 लाख गरीब परिवारों को उज्जवला योजना के जरिए मुफ्त गैस कनेक्शन मिलने से...
— PMO India (@PMOIndia) June 14, 2018
...26 लाख से ज्यादा लोगों को मुद्रा योजना के तहत बिना बैंक गारंटी कर्ज मिलने से, 60 लाख से ज्यादा गरीबों को 90 पैसे प्रतिदिन और एक रुपए महीना पर बीमा सुरक्षा कवच मिलने से, 13 लाख किसानों को फसल बीमा योजना का लाभ मिलने से, विकास की एक नई गाथा लिखी गई है: PM
— PMO India (@PMOIndia) June 14, 2018
छत्तीसगढ़ में 7 लाख ऐसे घर थे, जहां बिजली कनेक्शन नहीं था। सौभाग्य योजना के तहत 3.5 लाख घरों में बिजली कनेक्शन पहुंचाने का काम किया जा चुका है। 1100 ऐसे गांव जहां बिजली नहीं पहुंची थी, वहां अब बिजली पहुंच चुकी है। ये प्रकाश, विकास और विश्वास को घर-घर में रोशन कर रहा है: PM
— PMO India (@PMOIndia) June 14, 2018
ये मात्र योजनाएं नहीं हैं बल्कि गरीब-आदिवासी, वंचित-शोषित का वर्तमान और भविष्य उज्जवल बनाने वाले संकल्प हैं। हमारी सरकार आदिवासी और पिछड़े क्षेत्रों में रहने वाले लोगों की आय बढ़ाने के लिए भी विशेष तौर पर कार्य कर रही है: PM
— PMO India (@PMOIndia) June 14, 2018
आदिवासियों के हितों को देखते हुए वन अधिकार कानून को और सख्ती से लागू किया जा रहा है। पिछले चार साल में छत्तीसगढ़ में करीब एक लाख आदिवासी और आदिवासी समुदायों को 20 लाख एकड़ से ज्यादा जमीन का टाइटल दिया गया है: PM
— PMO India (@PMOIndia) June 14, 2018
सरकार आदिवासियों के शिक्षा, स्वाभिमान और सम्मान को ध्यान में रखते हुए भी काम कर रही है। आदिवासी बच्चों में शिक्षा का स्तर ऊपर उठाने के लिए देशभर में एकलव्य विद्यालय खोले जा रहे हैं: PM
— PMO India (@PMOIndia) June 14, 2018