Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சண்டிகரில் உள்ள அகழ்வாய்வு பொருட்களுக்கான அருங்காட்சியத்துக்கு பிரெஞ்சு அதிபர் பிரான்காயிஸ் ஹாலாண்டே மற்றும் பாரதப் பிரதமர் வருகை.

சண்டிகரில் உள்ள அகழ்வாய்வு பொருட்களுக்கான அருங்காட்சியத்துக்கு பிரெஞ்சு அதிபர் பிரான்காயிஸ் ஹாலாண்டே மற்றும் பாரதப் பிரதமர் வருகை.

சண்டிகரில் உள்ள அகழ்வாய்வு பொருட்களுக்கான அருங்காட்சியத்துக்கு பிரெஞ்சு அதிபர் பிரான்காயிஸ் ஹாலாண்டே மற்றும் பாரதப் பிரதமர் வருகை.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களும், பிரெஞ்சு அதிபர் பிரான்காயிஸ் ஹாலாண்டே அவர்களும், சண்டிகரில் உள்ள அரசு அருங்காட்சியகம் மற்றும் கலைக் கண்காட்சியை பார்வையிட்டனர். பிரெஞ்சு அதிபர் ஹாலாண்டேயின் அரசு வருகையையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இமாலய அடிவாரத்தில் இருந்து அகழ்வாய்ந்து எடுக்கப்பட்ட 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் இருந்ததற்காக அடையாளங்களை இரு நாட்டுத் தலைவர்களும் பார்வையிட்டனர். பிரான்ஸ் நாட்டின் தேசிய அருங்காட்சியகம் மற்றும் இயற்கை வரலாற்று அமைப்பும், சண்டிகரின் மானிடவியல் அமைப்பும் சேர்ந்து “இந்தியா மானுடவியல் அமைப்பு மற்றும் பிரான்ஸ் தேசிய அருங்காட்சியகம் மற்றும் இயற்கை வரலாறு அமைப்புடன் ஏற்பட்ட ஒப்பந்தம்” ன் அடிப்படையில் அந்த அகழ்வாய்வு நடைபற்றது.

அந்த அகழ்வாய்வு 200 குவார்ட்சைட் கருவிகள் உள்ளடக்கிய 1500 படிமங்களை சண்டிகரின் மாசோல் பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடங்களில் கண்டெடுபிடிக்க உதவியது. பாலேவோல் ரிவியு என்ற பத்திரிக்கையில், இந்த ஆராய்ச்சி தொடர்பான முடிவுகள் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் மற்றும் அதிபர் ஹாலாண்டே ஆகியோர் இந்திய பிரெஞ்சு ஆராய்ச்சிக் குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே நிலவும் நீண்ட நாள் கலாச்சார உறவுகளை இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் எடுத்துரைப்பதாக தெரிவித்தனர். மேலும், இரு நாட்டு கலாச்சாரங்களை மீட்டெடுத்து, பாதுகாத்து பரிமாறிக் கொள்ளவும் இந்த கூட்டுறவு உதவுவதாக தெரிவித்தனர். இது போன்ற கண்டுபிடிப்புகள் வருங்காலத்தில் மேலும் பல கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட உதவும் என்றும் தெரிவித்தனர்.

******